`இந்தப் பாதை பாதுகாப்பானதல்ல!’ - நள்ளிரவில் பேரணி நடத்திய பெண்களைத் தடுத்த போலீஸ் | Police insists women who marched for Nirbhaya to take autos for safety

வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (17/12/2018)

கடைசி தொடர்பு:18:20 (17/12/2018)

`இந்தப் பாதை பாதுகாப்பானதல்ல!’ - நள்ளிரவில் பேரணி நடத்திய பெண்களைத் தடுத்த போலீஸ்

நிர்பயாவின்ஆறாவது நினைவு நாளையொட்டி, அவர் பயணித்த பேருந்து சென்ற அதே சாகேத் - முனிர்கா சாலையில், நள்ளிரவிலிருந்து இரவு 2 மணிவரை 30-க்கும் மேற்பட்ட பெண்கள் அமைதிப் பேரணி நடத்தினர்.

`இந்தப் பாதை பாதுகாப்பானதல்ல!’ - நள்ளிரவில் பேரணி நடத்திய பெண்களைத் தடுத்த போலீஸ்

டெல்லி

ந்திய வரலாற்றில் பெரும் கரும்புள்ளி ஏற்படுத்திய தினம் 16 டிசம்பர் 2012. நாட்டின் தலைநகரிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாமல்போக, கொடூரமான முறையில் பாலியல் வன்முறை செய்யப்பட்டு உயிரிழந்த நிர்பயா முன் நாம் அனைவரும் தலைகுனிந்து நின்ற தினம். ஆறு வருடங்கள் கடந்துவிட்டன. ஆனால், இன்றும் நிர்பயா சென்ற பாதையில், பெண்களுக்கான பாதுகாப்பு இல்லை என்பதுதான் வேதனையான விஷயம்.

நிர்பயாவின் ஆறாவது நினைவு நாளையொட்டி, அவர் பயணித்த பேருந்து சென்ற அதே சாகேத் - முனிர்கா சாலையில், நள்ளிரவிலிருந்து இரவு 2 மணிவரை, முப்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் அமைதிப் பேரணி நடத்தினர்.

டெல்லி

அவர்களின் பாதுகாப்புக்காக வந்திருந்த காவல்துறையினர், பேரணியில் கலந்துகொண்ட பெண்களை, 'இந்தப் பாதை பெண்களுக்கு அவ்வளவு பாதுகாப்பில்லை; அதனால் ஆட்டோவில் செல்லுங்கள்' என்று அறிவுறுத்தியுள்ளனர். இதுகுறித்து, நேஹா தீட்ஷித் என்ற பத்திரிகையாளர் தன் ட்விட்டர் பக்கத்தில், `ஆறு  வருடங்களுக்கு முன் நிர்பயா சென்ற அதே பாதையில் நடக்கிறோம். காவல்துறையினர் எங்களைப் பின் தொடர்ந்து வந்துகொண்டிருந்தனர்; எங்களை ஆட்டோவில் செல்லுமாறு தொடர்ந்து கூறினர். அவர்களால் அங்கு பாதுகாப்பு உறுதி செய்யமுடியவில்லை' என்று பதிவிட்டிருந்தார்.

நிர்பயா


நிர்பயாவின் மரணத்தைத் தொடர்ந்து எத்தனையோ போராட்டங்களும், சில சட்டதிருத்தங்களும் கொண்டுவரப்பட்டன. ஆனால், இன்றளவும் டெல்லியிலுள்ள சாலைகள் பெண்களுக்குப் பாதுகாப்பானதாக இல்லை என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் நிரூபிக்கிறது. இந்நிலையில், நகரங்கள், இரண்டாம் நிலை நகரங்கள், கிராமங்களில் எல்லாம் பெண்களுக்கான பாதுகாப்பை எப்படி உறுதிசெய்வது?

நீங்க எப்படி பீல் பண்றீங்க