`ஒரே ஆண்டில் 95 புலிகளை இழந்துவிட்டோம்!’ - தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் | India lost 95 tigers this year says National Tiger Conservation Authority

வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (17/12/2018)

கடைசி தொடர்பு:21:20 (17/12/2018)

`ஒரே ஆண்டில் 95 புலிகளை இழந்துவிட்டோம்!’ - தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம்

ந்த ஆண்டில் மட்டும் இந்தியாவில் 95 புலிகள் இறந்துள்ளதாக தேசிய புலிகள் ஆணையம் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் தேசிய விலங்கான புலியின் எண்ணிக்கை குறைந்து வருவதைத் தடுப்பதற்காகக் கடந்த 2005-ம் ஆண்டு `தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம்’ அமைக்கப்பட்டது. இந்த அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட ஆய்வு முடிவின்படி இந்தியாவில் இந்த ஆண்டு மட்டும் 95 புலிகள் இறந்துள்ளன.

புலி

காடுகளை அழித்தல், காடுகளுக்குள் சாலைகள் அமைத்தல் போன்ற காரணங்களால் புலிகள் ஊருக்குள் வருவதால் அதைத் தாக்குவதாலும் புலியின் தோல், பல் நகங்களுக்காக அவற்றைச் சட்டவிரோதமாக மனிதர்கள் வேட்டையாடுவதாலும் இப்படி எண்ணிக்கை குறைகிறது.

Tiger

2018-ம் ஆண்டில் 14 புலிகள் மட்டுமே இயற்கையாக மரணித்திருப்பதாகவும், மீதம் மனிதர்களின் சட்டவிரோத நடவடிக்கைகளால் இறந்துள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புலிகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் இருந்து வெளியே வந்து வாழ்வதால்தான் இது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன என்பதும் அந்த அறிக்கையின் மூலம் தெரிகிறது. மத்தியப் பிரதேசத்தில் 22 புலிகள் இறந்திருக்கின்றன. அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலத்தில் 19 புலிகளும் கர்நாடகாவில் 15 புலிகளும் இறந்துள்ளன. தமிழகத்தில் 6 புலிகள் இறந்துள்ளன. மனிதத் தலையீடுகளால் புலிகளின் இறப்பு விகிதம் அதிகமாவது வேதனைக்குரியது. புலிகளின் பாதுகாப்புக்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.