`35 நாள்களுக்குள் இது ஏழாவது மிஷன்!’ - சாதனைக்கு மேல் சாதனை படைக்கும் இஸ்ரோ | in 35 days, this was the 7th mission by ISRO says Sivan

வெளியிடப்பட்ட நேரம்: 20:04 (19/12/2018)

கடைசி தொடர்பு:20:21 (19/12/2018)

`35 நாள்களுக்குள் இது ஏழாவது மிஷன்!’ - சாதனைக்கு மேல் சாதனை படைக்கும் இஸ்ரோ

35 நாள்களில் ஏழு ராக்கெட்டுகள் விண்ணில் செலுத்தி இஸ்ரோ சாதனை படைத்துள்ளது என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

இஸ்ரோ

இந்திய ராணுவம் மற்றும் விமானப்படைக்குப் பயனளிக்கும் வகையில் ஆங்ரிபேர்டு அல்லது ஜிசாட் 7A என அழைக்கப்படும் செயற்கைக்கோளை இஸ்ரோ வெற்றிகரமாக இன்று விண்ணில் நிலைநிறுத்தியது. ஜி.எஸ்.எல்.வி -எஃப்.11 ராக்கெட், ஜிசார்-7A செயற்கைக் கோள்களுடன் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து சரியாக மாலை 4.10 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு நிலைநிறுத்தப்பட்டது. பாதுகாப்புத்துறை பயன்பாட்டுக்காக இதுவரை இந்தியா மொத்தம் 13 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது. தற்போது இது 14வது செயற்கைக்கோளாகும்.

இஸ்ரோ

ஜிசாட் 7A விமானப்படையின் அனைத்து கண்காணிப்பு மண்டலங்களையும் ஒருங்கிணைக்கவும், ட்ரோன்களின் செயல்பாடுகளுக்கும் உதவியாக இருக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டது. இதுவரை இந்திய விமானப்படை அதிநவீன தகவல்களைப் பெற பிற நாட்டின் செயற்கைக்கோள்களின் உதவியை நாடி வந்த நிலையில் இனி அந்தத் தேவை இருக்காது. ஜிசாட் 7A வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டுள்ள நிலையில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

சிவன்

இதற்கிடையே, ஜிசார்-7A குறித்துப் பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், ``கடந்த 35 நாள்களில் இது ஏழாவது மிஷன் ஆகும். 35 நாள்களில் ஏழு ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தி இஸ்ரோ சாதனை படைத்துள்ளது. இதில் இந்திய தயாரிப்பில் உருவான நான்கு செயற்கைக்கோள்களும், மூன்று ராக்கெட்டுகளை அடங்கும். இவை அனைத்தும் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்தே ஏவப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட GSLV Mk II ராக்கெட் அற்புதமாகச் செயல்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது" என்று பெருமையாகக் கூறினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க