இந்தியாவின் அதிவேக ரயிலின் சோதனை ஓட்டத்தின்போது எறியப்பட்ட கற்கள் - அதிகாரிகள் அதிர்ச்சி | India's fastest engineless 'Train 18' pelted with stones on test run

வெளியிடப்பட்ட நேரம்: 09:30 (21/12/2018)

கடைசி தொடர்பு:09:30 (21/12/2018)

இந்தியாவின் அதிவேக ரயிலின் சோதனை ஓட்டத்தின்போது எறியப்பட்ட கற்கள் - அதிகாரிகள் அதிர்ச்சி

இந்தியன் ரயில்வேயின் முதல் இன்ஜின் இல்லாத அதிவேக ரயிலாக அறிவிக்கப்பட்ட 'ட்ரெயின் 18'யை வருகிற 29-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைக்க உள்ளார்.

ட்ரெயின் 18 மீது கல்வீச்சு

Source: twitter.com/ManiSudhanshu58

டெல்லி-ஆக்ரா இடையே இந்த ரயிலின் சோதனை ஓட்டம் நேற்று நடந்தது. இந்த ஓட்டத்தின்போது ரயிலின் மீது கல்லெறிந்து சிலர் சேதம் ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர் ரயில்வே அதிகாரிகள். இந்தச் சம்பவத்தில் ஒரு பெட்டியில் இருக்கும் ஜன்னல் கதவுகள் உடைந்திருக்கின்றன. இந்த ரயில் சோதனை ஓட்டத்தில் அதிகபட்சமாக மணிக்கு 181 கிலோமீட்டர் வேகத்தைத் தொட்டது குறிப்பிடத்தக்கது. 

இதைப்போன்ற செயல்களில் பொதுமக்கள் யாரும் ஈடுபட வேண்டாம், தங்களது சேவைக்குத்தான் இந்த வண்டிகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன என்ற கோரிக்கையை மக்களிடம் வைத்துள்ளது ரயில்வே நிறுவனம்.  இந்தக் காரியத்தைச் செய்தவரை விரைவில் கண்டுபிடித்து தண்டனை வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகத்தரம் வாய்ந்த இந்த ரயில் நமது சென்னை பெரம்பூர் ரயில்வே தொழிற்சாலையில்தான் தயாரிக்கப்பட்டது. டச் ஃப்ரீ பயோ டாய்லெட், LED லைட்டிங்,  மொபைல் சார்ஜிங் போர்ட்கள், Wifi, வானிலையைப் பொறுத்து உள்ளிருக்கும் வெப்பநிலையை மாற்றுவது போன்ற பல சிறப்பு வசதிகள் இந்த ரயிலில் கொடுக்கப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க