`ஜின்னா இல்லம் எங்களுக்கே சொந்தம்!' - பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது இந்தியா | MEA has announced that Indian Govt will acquire the Jinnah House

வெளியிடப்பட்ட நேரம்: 13:20 (21/12/2018)

கடைசி தொடர்பு:13:20 (21/12/2018)

`ஜின்னா இல்லம் எங்களுக்கே சொந்தம்!' - பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது இந்தியா

முகமது அலி ஜின்னாவின் மும்பை வீடு இந்திய அரசுக்கே சொந்தம் என வெளியுறவுத் துறை கூறியுள்ளது.

ஜின்னா

தெற்கு மும்பையில் மலபார் ஹில் பகுதியில் 'ஜின்னா ஹவுஸ்' அமைந்துள்ளது. இதைச் சுற்றி 2.5 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த இல்லத்தைப் புதுப்பிக்க உள்ளதாகவும், கலாசார மையத்தின் கீழ் உள்ள இல்லத்தை வெளியுறவுத்துறைக்கு மாற்ற அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அறிவித்திருந்தார். ஆரம்பம் முதலே இந்த இல்லத்தை உரிமை கொண்டாடி வரும் பாகிஸ்தான் தற்போது மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

ஜின்னா

இதுதொடர்பாக பேசிய பாகிஸ்தான் வெளியுறவு செய்தி தொடர்பாளர், ``ஜின்னா இல்லத்தை வேறுயாரும் உரிமை கொண்டாட முடியாது. அது பாகிஸ்தானுக்கே சொந்தம். இதை இந்திய அரசு ஏற்கெனவே ஒப்புக்கொண்டுள்ளது" என்று எதிர்ப்பு தெரிவித்தார். இதற்குப் பதிலடி கொடுத்துள்ள இந்திய வெளியுறவுத்துறை, ``ஜின்னாவின் மும்பை வீடு இந்திய அரசுக்கே சொந்தம். இதைப் புதுப்பிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. ஹைதராபாத் நிஜாம் மாளிகையைப் போல் புதுப்பிக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன" என்று கூறப்பட்டுள்ளது. 

ஜின்னா பங்களா

பிரிவினைக்கு முன், `பாகிஸ்தானின் தந்தை' முகமது அலி ஜின்னா கட்டிய  பங்களா இது. இந்தப் பங்களா அமைந்துள்ள நிலத்தின் தற்போதைய மதிப்பு 400 மில்லியன் அமெரிக்க டாலர்கள். கடந்த 1936-ல் ஜின்னா இந்த வீட்டைரூ.2 லட்சம் செலவழித்துக் கட்டினார். ஐரோப்பிய கட்டடக் கலையில், கடலைப் பார்த்த வண்ணம் இந்தப் பங்களா கட்டப்பட்டிருக்கும். பங்களா முழுவதும் இத்தாலி மார்பிள்கள் இழைக்கப்பட்டிருக்கும்.முகமது அலி ஜின்னா, ரசித்து ரசித்து இதைக் கட்டியதாகச் சொல்வார்கள். ஜின்னா, அவரின் மனைவி மரியம் ஆகியோர் இங்கு வாழ்ந்தனர். ஜின்னாவின் ஒரே மகள் தீனா இங்கேதான் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க