வெளியிடப்பட்ட நேரம்: 12:30 (22/12/2018)

கடைசி தொடர்பு:12:30 (22/12/2018)

`15,86,571 பேர் பாதிப்பு; 8,01,374 பேர் உயிரிழப்பு!' - இந்தாண்டிலும் அச்சுறுத்திய கேன்சர்

இந்தியாவில் இந்த வருடத்தில் மட்டும் கேன்சர் நோயினால் சுமார் எட்டு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. 

கேன்சர்

தற்போதைய காலகட்டத்தில் பலர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றனர். நாம் உண்ணும் உணவு, பழக்க வழக்கம் போன்ற பல காரணங்களால் புற்றுநோய் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. சிறியவர்கள், பெரியவர்கள் என வயது வித்தியாசமில்லாமல் அனைவரும் இந்த நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில் இந்த வருடம் (2018) மட்டும் 8,01,374 பேர் கேன்சரால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கையை மக்களவை உறுப்பினர் அனுபிரியா படேல் நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். 

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மேற்கொண்ட ஆய்வில், இந்த வருடத்தில் 15,86,571 பேர் கேன்சரால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில்  8,01,374 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதுவே 2015-ம் ஆண்டு 13,88,397 பேரும் 2016-ம் ஆண்டு 14,51,417 பேரும்  2017-ம் ஆண்டு 15,17,426 பேரும் கேன்சரால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அனுபிரியா படேல்

 கேன்சர், சர்க்கரை நோய், இதய நோய் ஆகியவற்றைத் தடுக்க தேசிய சுகாராதக் குழுவின் உதவியுடன் மிகப்பெரிய திட்டம் செயல்படுத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாக அனுபிரியா கூறியுள்ளார். மேலும் மார்பகப் புற்றுநோய், தொண்டைப் புற்று நோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஆகிய மூன்றுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து அதைத் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.