33 பொருட்களின் ஜி.எஸ்டி வரி குறைப்பு - மத்திய அரசு அறிவிப்பு! | Goods and Services Tax reduce for 33 produts

வெளியிடப்பட்ட நேரம்: 18:50 (22/12/2018)

கடைசி தொடர்பு:18:50 (22/12/2018)

33 பொருட்களின் ஜி.எஸ்டி வரி குறைப்பு - மத்திய அரசு அறிவிப்பு!

33பொருட்களுக்கான ஜி.எஸ்.டி குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.டெல்லியில் நடைபெற்ற ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்துக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு அருண் ஜெட்லி


டெல்லியில் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தையடுத்து 33 பொருட்களுக்கான ஜி.எஸ்.டி வரிவிகிதம் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கணினி மானிட்டர், டி.வி திரை, டயர், பவர் பேங்க், விளையாட்டுப்பொருட்கள் மற்றும்  வீடியோ கேம் உள்ளிட்ட பொருட்கள் மீதான 28 சதவீத ஜிஎஸ்டி வரியும் 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. திரையரங்கு டிக்கெட் கட்டணங்களுக்கான ஜி,.எஸ்.டி வரி விதிப்பும் குறைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக ரூபாய் 100 வரையிலான திரைப்பட டிக்கெட் கட்டணங்களுக்கு அமலில் இருந்த 18 சதவீத ஜி.எஸ்.டி 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல, 100ரூபாய்க்கும் மேலாக இருந்த டிக்கெட் கட்டணங்கள் 28 சதவீதத்திலிருந்து 18சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டி

சிறப்பு விமானங்களுக்கு இனி பிரமீயம் வரி இனி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சூரிய மின்சக்தி மற்றும் மாற்று எரிசக்தி பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி வரியும்5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அண்மையில் பிரதமர்மோடி நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ஜி.எஸ்.டி.யில் உள்ள 1,200 பொருட்களில் 0.5 அல்லது 1 சதவீத பொருட்கள் மட்டுமே 28 சதவீத வரி விகிதத்தில் இருக்கும்.  ஆடம்பர பொருட்கள் மற்றும் சில குறிப்பிட்ட பொருட்களுக்கு மட்டுமே 28 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்படுகிறது.  இதை மேலும் எளிமையாக்கும் வகையில், 99 சதவீத பொருட்களை 18 சதவீத ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கூறினார். அந்த வகையில் தற்போது வரிவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 33 பொருட்களின வரி குறைக்கப்பட்டுள்ளது. 7 பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி  28%இல் இருந்து 18%ஆக குறைக்கப்பட்டுள்ளது.  மீதமுள்ள 26 பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. 12%இல் இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.