வெளியிடப்பட்ட நேரம்: 14:20 (24/12/2018)

கடைசி தொடர்பு:14:20 (24/12/2018)

காத்திருக்கும் 4 லட்சம் வேலைவாய்ப்புகள்: இ-காமர்ஸ், ஐ.டி துறையில் அதிக டிமாண்ட்!

ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ் ( Artificial Intelligence), ரோபாட்டிக்ஸ் ( Robotics), பிளாக் செயின் (Black Chain), ஐஓடி (The Internet of Things) போன்றவற்றில் திறமை வாய்ந்தவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு உள்ளதாக...

ரவிருக்கும் 2019-ம் ஆண்டில் மூன்று முக்கிய துறைகளில் 4 லட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் காத்திருப்பதாக பல முன்னணி ஹெச்ஆர் நிறுவனங்கள் கணித்துள்ளன. 

வேலை வாய்ப்பு

மாறிவரும் டிஜிட்டல் யுகத்துக்கு ஏற்ப பல்வேறு துறைகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த மாற்றங்களைச் செயல்படுத்துவதற்கு ஏற்ப பணியாளர்களும் தேவைப்படுகின்றனர். அந்த வகையில், வரவிருக்கும் 2019-ம் ஆண்டில் இன்ஜினீயரிங், ஐடி மற்றும் இ காமர்ஸ் எனப்படும் ஆன்லைன் வர்த்தகத் துறைகளில் அதிக பணியாளர்கள் தேவைப்படுவார்கள் என ஹெச்ஆர் ஆலோசனை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. 

இன்ஜினீயரிங் துறையில் குறிப்பாக சிவில் மற்றும் ஸ்ட்ரக்ச்சரல் இன்ஜினீயரிங் பிரிவில் அதிக பணியாளர்கள் தேவைப்படுவார்கள். இது உட்கட்டமைப்பு துறையைச் சார்ந்ததாக அமையும் என அந்த நிறுவன ஆலோகர்கள் தெரிவிக்கின்றனர். 

அதற்கு அடுத்தபடியாக ஐடி துறை மற்றும் இ காமர்ஸ் துறைகளில் 5 முதல் 8 சதவிகிதம் வரை கூடுதல் பணியாளர்கள் தேவைப்படுவார்கள் எனக் கணிக்கப்பட்டுள்ளது. 

2018-ம் ஆண்டில் ஸ்டார்ட் அப் துறையில் இதுவரை சுமார் 10 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்பட்டுள்ள நிலையில், வரவிருக்கும் ஆண்டில் இன்ஜினீயரிங் மற்றும் மேலாண்மை பட்டதாரிகள் சொந்தமாகவே கடைகளைத் தொடங்க வாய்ப்பு உள்ளது என்பதால், ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ் ( Artificial Intelligence), ரோபாட்டிக்ஸ் ( Robotics), பிளாக் செயின் (Black Chain), ஐஓடி (The Internet of Things) போன்றவற்றில் திறமை வாய்ந்தவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு உள்ளதாக பெங்களூரைச் சேர்ந்த ஹெச்ஆர் நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. 

ஐடி வேலை

அதேபோன்று ஐடி துறையில் வேலைவாய்ப்பு அதிகம் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னணி ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி நிறுவனம், கடந்த செப்டம்பர் காலாண்டில் 10,227 பணியாளர்களை வேலைக்கு அமர்த்தி உள்ள நிலையில், அதிகரிக்கும் தொழில்நுட்ப தீர்வுகளுக்கு ஏற்ற வகையில் பணியாளர்களின் தேவை அதிகரித்து வருவதாகத் தெரிவித்துள்ளது. ஐடி துறையில், வரவிருக்கும் 2019-ல் சுமார் 2.5 லட்சம் பணியாளர்கள் புதிதாக பணியமர்த்தப்பட வாய்ப்பு உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க