படேல் சிலையை சுற்றிப்பார்க்க ஹெலிகாப்டர்! - புதிய வசதிகளை ஏற்பாடுசெய்த குஜராத் | Helicopter ride services introduce to see statue of unity

வெளியிடப்பட்ட நேரம்: 11:52 (25/12/2018)

கடைசி தொடர்பு:11:56 (25/12/2018)

படேல் சிலையை சுற்றிப்பார்க்க ஹெலிகாப்டர்! - புதிய வசதிகளை ஏற்பாடுசெய்த குஜராத்

ர்மதை நதிக்கரையில், சர்தார் சரோவர் அணையின் அருகே 3,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 182 அடி உயரமுள்ள படேல் சிலை நிறுவப்பட்டுள்ளது. வல்லப பாய் படேலின் 143-வது பிறந்த தினமான கடந்த அக்டோபர் 31-ம் தேதி, சிலையை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரமர் மோடி.

படேல் சிலை

`நாட்டு மக்கள் வறுமையில் இருக்கும்போது, ரூ.3,000 கோடி செலவில் இந்தச் சிலை தேவையா?' என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. இருந்தும், சிலை திறக்கப்பட்ட பிறகு அந்தப் பகுதி சுற்றுலாத்தளமாக மாறிவருகிறது. இந்த இடத்தை இன்னும் மேம்படுத்துவதற்குப் பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது குஜராத் அரசு. 

படேல் சிலையைப் பார்க்க ஹெலிகாப்டர் வசதி

PC : Twitter/@skumar_76

முதல்கட்டமாக,  உலகிலேயே மிக உயரமான படேல் சிலையை சுற்றிப்பார்க்க ஹெலிகாப்டர் வசதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. படேல் சிலையைச் சுற்றி சுமார் 10 நிமிடங்கள் இந்த ஹெலிகாப்டர் பறக்கும். இதற்குக் கட்டணமாக ரூ.2,900 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஆறு செய்தியாளர்கள் உள்பட 59 பேர் ஹெலிகாப்டரில் பயணித்துள்ளனர். 

ஹெலிகாப்டர் வசதி

படேல் சிலை திறக்கப்பட்ட மறுநாளில் இருந்து, தொடர்ந்து 11 நாள்களில் சுமார் ஒரு லட்சம் பேர், சிலையை சுற்றிப்பார்க்க வந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நாளொன்றுக்கு குறைந்தது 15,000 சுற்றுலாப் பயணிகள் இங்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.