`அந்த மகிழ்ச்சி விலைமதிப்பற்றது!’ - குழந்தைகளுக்கு `சாண்டா’ சச்சின் கொடுத்த சர்ப்ரைஸ் | Merry Christmas to all of you- Sachin tweet

வெளியிடப்பட்ட நேரம்: 19:08 (25/12/2018)

கடைசி தொடர்பு:21:13 (25/12/2018)

`அந்த மகிழ்ச்சி விலைமதிப்பற்றது!’ - குழந்தைகளுக்கு `சாண்டா’ சச்சின் கொடுத்த சர்ப்ரைஸ்

சச்சின் டெண்டுல்கர்


இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கிறிஸ்துமஸ் தினமான இன்று குழந்தைகள் நல வாழ்வு மையத்தில் இருக்கும் சிறுவர், சிறுமியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இயேசு பிறந்த தினத்தை கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் விழாவாகக் கொண்டாடி மகிழ்கின்றனர். கிறிஸ்துமஸ் என்றதுமே வீட்டின் முன் தொங்கும் பெரிய ஸ்டார் லைட், கிறிஸ்துமஸ் மரம், சாண்டாவின் பரிசுகள் எனக் குழந்தைகள் குதூகலமாகிவிடுவர். இந்த உற்சாகத்தைக் குழந்தைகள் நல வாழ்வு மையத்தில் இருக்கும் சிறுவர்களுடன் பகிர்ந்துகொண்டுள்ளார் சச்சின். சாண்டா கிளாஸ் வேடம் அனிந்து சென்ற சச்சின் அங்குள்ள குழந்தைகளுக்குப் பரிசுப்பொருள்களை வழங்கி அவர்களோடு தனது பொழுதை செலவிட்டுள்ளார். 

குழந்தைகள்

இதுதொடர்பான வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டுள்ள சச்சின், `` ஹூ...ஹூ.. அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள். அஷ்ரே சிறுவர் பராமரிப்பு மையத்தில் இருக்கும் இந்த இளைஞர்களுடன் பழகுவதே ஆச்சர்யமாக இருக்கிறது. அவர்களுடைய அப்பாவி முகங்களின் மகிழ்ச்சி விலைமதிப்பற்றதாக இருந்தது!” எனப் பதிவிட்டுள்ளார்.

சாண்டா கிளாஸ் வேடமணிந்து சச்சின் தனது காரில் அந்த மையத்துக்கு விசிட் அடித்தார். சாண்டா வேடத்தில் சென்ற சச்சின் அங்கிருந்த குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கியவர். சிறிது நேரத்துக்குப் பிறகே தனது வேடத்தைக் களைத்தார். சச்சினைக் கண்டதும் குழந்தைகள் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தனர். சிறிதுநேரம் அவர்களுடன் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தார்.