வெளியிடப்பட்ட நேரம்: 07:20 (26/12/2018)

கடைசி தொடர்பு:07:23 (26/12/2018)

15,000 பேருக்கு இலவச பிரசவம் பார்த்த ஏழைகளின் தாய் -பத்மஸ்ரீ சுலகிட்டி நரசம்மா காலமானார்

ர்நாடக மாநிலம்  கிருஷ்ணபுரா என்ற சிறிய ஊரைச் சேர்ந்தவர் நரசம்மா. இன்றும் இந்தியாவின் பல கிராமங்களில் முறையான மருத்துவ வசதிகள் சென்று சேராத நிலையில், கிருஷ்ணபுராவைச் சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த 15,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு பிரசவம் பார்த்துள்ளார். இதனால், ‘சுலகிட்டி’ என்ற அடைமொழி இவருடைய பெயருக்கு முன்னால் ஒட்டிக்க கொண்டது. ‘சுலகிட்டி’ என்ற கன்னட வார்த்தைக்கு ‘வீட்டில் பிரசவம் பார்க்கும் மருத்துவச்சி’ எனப் பொருள்.

சுலகிட்டி நரசம்மா

Photo: Wikimedia

சுலகிட்டி நரசம்மா ஒரு நாடோடி வம்சத்தவர். தன்னுடைய 12-வது வயதில் திருமணம் செய்துகொண்டதால், கல்வி கற்கும் வாய்ப்பை இழந்தார். நரசம்மாவுக்கு 20 வயது இருக்கும்போது தன்னுடைய பாட்டியிடமிருந்து வீட்டில் பிரசவம்பார்க்கும் முறையைக் கற்றுக் கொண்டார். காலப்போக்கில், பிரசவம் பார்ப்பதில் கைதேர்ந்தவராக மாறியவர், இது வரை 15,000 பேருக்கு வீட்டில் பிரசவம் பார்த்துள்ளார்.

 சமீபத்தில், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட நரசம்மா, நேற்று (டிசம்பர் 25 -ம் தேதி) உயிரிழந்தார். இவருடைய இழப்புக்கு பிரபலங்கள் பலரும் வருத்தம் தெரிவித்துள்ளனர். சிறு வயதில் கல்வி கற்கும் வாய்ப்பை இழந்த இவருக்கு, கடந்த 2014-ம் ஆண்டு இவருடைய சேவையைப் பாராட்டி தும்கூர் பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் வழங்கியது. அதேபோல, இந்த ஆண்டு இந்திய அரசின் உயரிய  விருதுகளில் ஒன்றான பத்மஶ்ரீ விருது வழங்கிச் சிறப்பித்தது.