பாகிஸ்தான் பிரதமருக்கு பதிலடி கொடுத்த முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் | kaif tweet about Pakistan prime minister

வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (26/12/2018)

கடைசி தொடர்பு:08:51 (26/12/2018)

பாகிஸ்தான் பிரதமருக்கு பதிலடி கொடுத்த முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப்

சில மாதங்களுக்கு முன் நடந்து முடிந்த பாகிஸ்தான் தேர்தலில், புதிய பிரதமராக  பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் பதவி ஏற்றார். இந்நிலையில், சமீபத்தில் லாகூர் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “ சிறுபான்மையினரை எப்படி நடத்த வேண்டும் என மோடி அரசுக்கு நாங்கள் காண்பிக்கின்றோம், இந்தியாவில், சிறுபான்மையினர் மற்ற மக்களுக்கு இணையாக நடத்தப் படவில்லை” என்று பேசினார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

இந்தப் பேச்சை இந்தியாவைச் சேர்ந்த பல அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டித்திருந்தனர். இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த  அகில இந்திய மஜ்லிஸ் இ இத்திஹதுல் முஸ்லிம் தலைவர் அசாருதீன் ஓவைசி  “ பாக்கிஸ்தானில் ஒரு முஸ்லிம் மட்டும்தான் பிரதமராக வரமுடியும். ஆனால் இந்தியாவில், பல ஒடுக்கப்பட்டவர்கள் ஜனாதிபதிகளாக வந்துள்ளனர். அனைவரையும் உள்ளடக்கிய  அரசியலமைப்பு எங்களிடம் உள்ளது “ என்று கருத்து தெரிவித்திருந்தார்.

கைஃப்

இம்ரான் கானின் பேச்சைக் கண்டித்து, இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரான முகமது கைஃப் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “ இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின்போது, பாகிஸ்தானில் 20 சதவிகிதம் சிறுபான்மையினர் இருந்தனர். ஆனால் இப்போது, 2 சதவிகிதம் தான் உள்ளனர். ஆனால் இந்தியாவில், சிறுபான்மை மக்கள் தொகை வளர்ந்துகொண்டேபோகிறது. சிறுபான்மையினர்களை எப்படி நடத்துவது என்பது பற்றி அறிவுரை வழங்கும் கடைசி நாடாக பாகிஸ்தான் இருக்க வேண்டும்“ என்று பதிவிட்டுள்ளார்.