வெளியிடப்பட்ட நேரம்: 11:57 (28/12/2018)

கடைசி தொடர்பு:11:57 (28/12/2018)

ஜும்மா தொழுகை நடத்திய பெண் இமாம்! - நாட்டிலே இதுதான் முதன்முறை

இந்தியாவிலே முதன்முறையாக, கேரளாவில் பெண் இமாமாக நியமிக்கப்பட்ட ஜமிதா ஜும்மா தொழுகை நடத்தியுள்ளார். 

பெண் இமாம்


இஸ்லாமியர்கள் பள்ளிவாசலுக்குச் சென்று ஐந்துவேளை தொழுகையில் ஈடுபடுவது வழக்கம். அந்தப் பள்ளிவாசல்களில் ஆண்கள் இமாமாக நின்று தொழுகை நடத்துவர். இதேபோல பள்ளிவாசல்களில் ஆண்களும், பெண்களும் அனுமதிக்கப்பட்டு, ஆண்களுக்கு ஆண் இமாமும், பெண்களுக்கு பெண் இமாமும் தொழுகை நடத்துவது தற்போது வரை நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த நடைமுறையை மாற்றி அமைத்துள்ளது கேரளாவில் உள்ள பள்ளிவாசல் ஒன்று. கேரளா மாநிலம், மலப்புரம் மாவட்டம் செருக்கோடு அருகில் உள்ள வண்டூர் என்ற இடத்தில் உள்ளது அந்தப் பள்ளிவாசல். அங்கு, குரான் சுன்னத் சொசைட்டி என்ற அமைப்பின் செயலாளராக இருப்பவர் ஜமிலா (34), இமாமாக நின்று ஜும்மா தொழுகை நடத்தியுள்ளார்.

இந்தத் தொழுகையில் 50-க்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்துகொண்டனர். இந்தியாவிலே முதன்முறையாக பெண் ஒருவர் இமாமாக இருந்து ஜும்மா தொழுகை நடத்தப்பட்டது. இதுவே முதன்முறை. இதுதொடர்பாக அவர் பேசுகையில்,`ஆண்கள் மாற்றாக தொழுகையை நடத்தும் முயற்சியின் தொடக்கமே இது. இஸ்லாமை பொறுத்தவரை, அது சமத்துவத்தை மட்டுமே விரும்புகிறது. ஆண்களும், பெண்களும் சமம் என்று இஸ்லாம் ஆணித்தரமாக வலியுறுத்தியுள்ளது. எங்கள் அமைப்பு சார்பில் இந்த முறையை நாங்கள் தொடர்வோம்''என்று கூறினார்.

சமூகவலைதளங்களில் அந்தப் பெண்ணுக்கு ஆதரவாகவும், சிலர் எதிராகவும் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஜமிலா, `நான் செய்த இந்தச் செயலால் எனக்கு எந்த மிரட்டலும் வரவில்லை. இருப்பினும் சமூகவலைதளங்களில் எனக்கு எதிராக சிலர் கருத்து தெரிவித்து வருவதை அறிகிறேன்' என்றார்.