வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (28/12/2018)

கடைசி தொடர்பு:15:20 (28/12/2018)

ஆண் ஊழியர்களுக்கு காத்திருக்கும் புத்தாண்டு பரிசு! - மத்திய அரசின் அசத்தல் அறிவிப்பு

மத்திய அரசில் பணிபுரியும் `single Parent' ஆக இருக்கும் ஆண் ஊழியர்களுக்குக் குழந்தைகள் பராமரிப்புக்காக (child care leave) 730 நாள்கள் விடுப்பு வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஏழாவது ஊதியக் கமிஷன் இதைப் பரிந்துரை செய்துள்ளது. 

தகப்பன்
 

தற்போது மத்திய அரசில் பணிபுரியும் பெண் ஊழியர்கள், இரண்டு குழந்தைகள் வரை வைத்திருந்தால் அவர்களைப் பராமரிக்க ஆண்டுக்கு 3 முறை குழந்தை பராமரிப்பு விடுப்பாக (CCL - child care leave) எடுத்துக் கொள்ளலாம். இதே போன்று தற்போது ஆண்களுக்கும் விடுப்பு வழங்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. அதன்படி Single parent ஆக இருக்கும் ஆண்கள், அதாவது திருமணம் ஆகாத / விவாகரத்து பெற்ற/ மனைவியை இழந்த ஆண் மட்டும் தனியாகக் குழந்தையைப் பராமரித்து வரும் பட்சத்தில் அவரின் ஒட்டுமொத்த பணிக் காலத்தில் 730 நாள்கள் குழந்தை பராமரிப்பு விடுப்பாக (CCL - child care leave) எடுத்துக் கொள்ளலாம். 

எனவே அந்த ஊழியர்கள், 730 நாள்களுக்கு மேல் விடுப்பு எடுத்தால் மட்டுமே சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படுமாம். 730 நாள்கள் விடுப்பில், முதல் 365 நாள்களுக்கு 100 சதவிகிதம் சம்பளமும் அடுத்த 365 நாள்களுக்கு 80 சதவிகித சம்பளமும் வழங்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட உள்ளது. இது தவிர பெண்கள் மகப்பேறு விடுப்பாக 180 நாள்கள் வழங்கப்படுவதுபோல் ஆணும் 15 நாள்கள் வரை விடுப்பு கேட்க முடியும்.

ஆண்
 

ஆண்களுக்கான குழந்தை பராமரிப்பு விடுப்பு குறித்து ஏழாவது ஊதியக் கமிஷன் வெளியிட்ட அறிக்கையில், `குழந்தைகளை தனி ஆளாக வளர்த்து வரும் ஆணின் தோள்களில் கூடுதல் பொறுப்புகள் விழுகின்றன. எனவே, அவர்களுக்கும் குழந்தை பராமரிப்பு விடுப்பு தேவை என எங்கள் கமிஷன் பரிந்துரைக்கிறது. அதுமட்டுமன்றி குழந்தைகளைத் தனியாக வளர்க்கும் பெண்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த விடுப்பில் சின்ன மாற்றம். பெண் ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 3 முறை குழந்தை பராமரிப்பு விடுப்பாக எடுத்துக் கொள்ளலாம் என்பது நடைமுறையில் உள்ளது. அதை ஆண்டுக்கு ஆறு முறை எடுத்துக்கொள்ளலாம் என்று பரிந்துரைக்கிறோம்’ எனக் கூறப்பட்டுள்ளது.

பெண்களுக்கான குழந்தை பராமரிப்பு விடுப்பை அறிமுகப்படுத்தியது ஆறாவது ஊதிய கமிஷன் என்பது குறிப்பிடத்தக்கது.  
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க