இதுதான் இந்தியாவின் வேகமான ரயில் - ட்விட்டரில் அறிவித்த பியூஷ் கோயல் | Train 18 has officially become the country’s fastest train

வெளியிடப்பட்ட நேரம்: 02:00 (29/12/2018)

கடைசி தொடர்பு:07:31 (29/12/2018)

இதுதான் இந்தியாவின் வேகமான ரயில் - ட்விட்டரில் அறிவித்த பியூஷ் கோயல்

ரயில் 18

'நீட் பார் ஸ்பீடு, மணிக்கு 180 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் ' ரயில் 18' ' இந்தியாவின் வேகமான ரயில் ' என ரயில்வே துறையின் அமைச்சர் பியூஷ் கோயல் புதன்கிழமை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பெரம்பூரில் உள்ள Integral coach factory- யால் வடிவமைக்கப்பட்ட இந்த ரயில் தற்பொழுது சோதனை செய்யப்பட்டு வருகிறது.

``மேட் இன் இந்தியா " திட்டத்தின் கீழ் 18 மாத காலத்தில் 100 கோடி ரூபாய் செலவில் இதை வடிவமைத்துள்ளனர். முதல்முறையாக இந்தியாவில் கட்டப்பட்ட இன்ஜின் இல்லாத ரயில், உள்நாட்டுப் போக்குவரத்துக்காக பயன்படுத்தப்படுகிறது. இது மணிக்கு 155 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும் Shatabdi எக்ஸ்பிரஸை ஒப்பிடும்போது 10 - 15% பயண நேரத்தைக் குறைக்கும். ரயில் தடங்கள் / டிராக்குகள் மற்றும் சிக்னல் சப்போர்ட் சிஸ்டம்களை மேம்படுத்தும்போது முழுமையான வேகத்தில் பயணிக்கும். இந்த நிதியாண்டின் இறுதிக்குள் மேலும் ஒரு ரயிலையும், அடுத்த நிதி ஆண்டில் நான்கு ரயிலையும் உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் இருந்து இந்த ரயில் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க