`நான்கு ஆண்டுகளில் ரூ.2,021 கோடி!’ - பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களுக்கான செலவு | More than Rs. 2,021 crore were spent on during PM Modi's visits to foreign countries

வெளியிடப்பட்ட நேரம்: 08:21 (29/12/2018)

கடைசி தொடர்பு:08:21 (29/12/2018)

`நான்கு ஆண்டுகளில் ரூ.2,021 கோடி!’ - பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களுக்கான செலவு

பிரதமர் மோடி அதிகமாக வெளிநாடு செல்வார் என்பது பலருக்கும் தெரியும் கடந்த நான்கு வருடங்களில் அவர் வெளிநாடு சென்ற செலவு 2,021 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது. 

பிரதமர் மோடி

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நேற்றைய கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 4 ஆண்டுகளில் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணம் மற்றும் அதற்கான செலவுகள் குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. 

அந்தக் கேள்விக்கு மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.கே சிங் எழுத்துபூர்வமாகப் பதிலளித்தார். அந்தப் பதிலில்,``கடந்த 2014-ம் ஆண்டுமுதல் 2018-ம் ஆண்டுவரை பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணச் செலவு ரூ.2,021 கோடி. தனி விமானம், விமான பராமரிப்பு, நேரடி தொலைபேசி இணைப்பு ஆகியவை இதில் அடங்கும். நான்கு ஆண்டுகளில் பிரதமர் 10 மிக முக்கிய நாடுகள் உட்பட மொத்தம் 55 நாடுகளுக்குப் பயணம் செய்துள்ளார். 2014-15-ம் ஆண்டுகளில் மட்டும் மோடியின் வெளிநாட்டுச் செலவு ரூ.93.76 கோடி, 2015-16-ம் ஆண்டுகளில் ரூ.117.89 கோடி. 2016-17-ம் ஆண்டுகளில் ரூ. 76.27 கோடி மற்றும் 2017-18-ம் ஆண்டுகளில் மட்டும் அவரின் வெளிநாட்டுச் செலவு ரூ.99.32 கோடி. 

2014-ம் ஆண்டுக்கு முன்னர் இந்தியாவில் வெளிநாடுகளின் நேரடி முதலீடு 30,930 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. ஆனால், பிரதமரின் பயணத்துக்குப் பிறகு தற்போது அது 43,478 மில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.