“வீட்ல நடிக்க ஒத்துக்கல... இயக்குநராயிட்டேன்!” - விருது வென்ற பெண் இயக்குநர் லக்ஷ்மி பூஜா | Director Lakshmi Pooja talks about her award winning shortfilm 'Nithyasumangali'

வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (31/12/2018)

கடைசி தொடர்பு:22:30 (31/12/2018)

“வீட்ல நடிக்க ஒத்துக்கல... இயக்குநராயிட்டேன்!” - விருது வென்ற பெண் இயக்குநர் லக்ஷ்மி பூஜா

“வீட்ல நடிக்க ஒத்துக்கல... இயக்குநராயிட்டேன்!” - விருது வென்ற பெண் இயக்குநர் லக்ஷ்மி பூஜா

லக்‌ஷ்மி

”முதன்முதல்ல 'சந்திரமுகி' படம் பார்த்தப்போதான், தேவதாசிகளின் வாழ்க்கை முறை பத்தி நான் தெரிஞ்சிக்கிட்டேன். அதன்பிறகு அதைப் பற்றி படிக்க ஆரம்பிச்சேன்.  'நித்தியசுமங்கலி'னு ஒரு புத்தகம் படிச்சேன். இன்னும் சில புத்தகங்கள், ஆவணப்படங்கள் பார்த்தேன். அவற்றில் எல்லாம் இருந்துதான் என்னுடைய குறும்படத்துக்கான கதையை  உருவாக்கினேன்” என்கிறார் லக்ஷ்மி பூஜா. சமீபத்தில் மும்பையில் நடந்த காலா-சம்ருத்தி சர்வதேச குறும்பட விழாவில், ‘நித்தியசுமங்கலி’ என்ற குறும்படத்தை இயக்கியதற்காக, பெங்களூருவைச் சேர்ந்த லக்ஷ்மி பூஜா சிறந்த பெண் இயக்குநருக்கான  இரண்டாவது பரிசு வென்றிருக்கிறார்.

லக்‌ஷ்மி

தேவதாசிகளின் வரலாற்றை மையமாகக் கொண்டு இயக்கப்பட்ட இந்தக் குறும்படம் குறித்தும், அவரின் இயக்குநர் பயணம் பற்றியும் லக்ஷ்மியிடம் பேசினோம். “எனக்கு சொந்த ஊர் வேலூர். ஆனா, அப்பாவின் வேலை காரணமா பெங்களூரில் செட்டில் ஆனோம். எனக்கு திரைப்படங்கள் ரொம்பப் பிடிக்கும். நான் கலை சம்பந்தமாகத்தான் வேலை செய்யணும்னு முடிவுபண்ணினேன். ஆரம்பத்துல எனக்கு நடிக்கத்தான் ஆசை. கன்னட இசைப்பாளர் உபேந்தரா குமார், எங்க உறவினர். ஆனாலும், நான் சினிமாவில்  நடிக்கக் கூடாதுனு எங்க வீட்டுல எதிர்ப்பு. ஒருமுறை இதுபத்தி பேசிட்டு இருந்தப்போ, 'வேணும்னா... டைரக்‌ட் பண்ணு'னு சொன்னார் எங்க அப்பா. இந்த வார்த்தையை ஒரு சவாலா  எடுத்துக்கிட்டு, இயக்குநராக முடிவுபண்ணினேன். அந்த நேரத்துல தேவதாசி முறை பத்தி கொஞ்சம் ஆய்வு பண்ணி, இந்தக் குறும்படத்தை இயக்கினேன். அதுல ஓரளவு வெற்றியும் அடைஞ்சிருக்கேன்.

லக்‌ஷ்மி

இப்போ ரெண்டு மூணு கதைகள் தயார்பண்ணி வச்சிருக்கேன். அடுத்த வருஷம் நிச்சயம் திரைப்படம் இயக்கும் வேலையில்  இறங்கிடுவேன்!” என்று மகிழ்ச்சியுடன் சொல்கிறார் லக்ஷ்மி.

நீங்க எப்படி பீல் பண்றீங்க