'உள்ளேன் ஐயாவுக்குப் பதிலாக ஜெய்ஹிந்த்!' - குஜராத் பள்ளிகளில் இன்று முதல் அமல் | Gujarat school department mandatory for Jai Hind

வெளியிடப்பட்ட நேரம்: 12:30 (01/01/2019)

கடைசி தொடர்பு:12:30 (01/01/2019)

'உள்ளேன் ஐயாவுக்குப் பதிலாக ஜெய்ஹிந்த்!' - குஜராத் பள்ளிகளில் இன்று முதல் அமல்

குஜராத் கல்வித்துறை, 2019-ம் ஆண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து  வருகைப்பதிவு செய்யும்போது, `உள்ளேன் ஐயா', `பிரசன்ட் சார்' என்று சொல்வதற்குப் பதிலாக 'ஜெய் ஹிந்த்', 'ஜெய் பாரத்' என்று சொல்ல வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.  இரண்டு நாள்களுக்கு முன்பு நடந்த கூட்டத்தில், குஜராத் கல்வி அமைச்சர் பூபேந்திரசிங் சுதாசமா அவர்களின் தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

குஜராத் பள்ளி

குஜராத்தில் உள்ள ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் வருகைப் பதிவின்போது, உள்ளேன் ஐயா, பிரசன்ட் சார் என்று சொல்வதற்குப் பதிலாக ஜெய் ஹிந்த், ஜெய் பாரத் என்று சொல்லி வருகைப் பதிவை உறுதிசெய்ய வேண்டும் என்று ஆரம்பப் பள்ளி மற்றும் உயர்கல்வி இயக்குநரகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளும் இதுகுறித்து பள்ளிகளுக்கு அறிக்கை அனுப்பியுள்ளனர்.

2017-ம் ஆண்டில் மத்தியப் பிரதேசத்திலும், இதேபோன்று பள்ளிகளில் வருகைப்பதிவை பதிவுசெய்யும்போது, ஜெய் ஹிந்த் என்று சொல்ல வேண்டும் என்பதை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம், மாணவர்களிடையே நாட்டுப்பற்றை உருவாக்க முடியும் என்று நம்புகிறது பாரதிய ஜனதா கட்சி.