வெளியிடப்பட்ட நேரம்: 10:50 (02/01/2019)

கடைசி தொடர்பு:10:50 (02/01/2019)

620 கி.மீ; ஐம்பது லட்சம் பேர் - கேரளாவை அதிரவைத்த பெண்கள்

பாலின சமத்துவத்தை வலியுறுத்தி நேற்று கேரளாவில் பெண்கள் மேற்கொண்ட மனிதச் சுவர் போராட்டம் அதிக கவனம் பெற்றுள்ளது. 

PC : Twitter / @brahma_n

சபரிமலைக்கு அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற அறிவிப்பைத் தொடர்ந்து பல பெண்கள் சபரிமலை சென்று உள்ளே செல்ல முடியாமல் திரும்பிச் சென்றுள்ளனர். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு கேரள எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதே கோரிக்கை காரணமாக கேரள சட்டசபையும் முடக்கப்பட்டது. தொடர் போராட்டங்கள் காரணமாக சபரிமலைப் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

PC : Twitter / @GeorgieVerghis

இந்த நிலையில் வழிபாட்டுத் தலங்களில் பாலின சமத்துவம் வேண்டும் அதாவது ஆணும் பெண்ணும் சமம் என்ற கோரிக்கை வலியுறுத்தி நேற்று ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனிதச் சுவர் போராட்டம் நடத்தப்பட்டது.

'

PC : Twitter /  @brahma_n

இதில் பல லட்சக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டனர். திருவனந்தபுரத்திலிருந்து காசர்கோடு வரை சுமார் 620 கி.மீ தூரத்துக்கு இந்த பெண்கள் சாலை ஓரங்களில் அணிவகுத்து நின்றனர். அப்போது அவர்கள் உறுதிமொழியும் ஏற்றுக்கொண்டனர். சுமார் அரை மணி நேரம் நடந்த இந்த நிகழ்வு ஒட்டுமொத்த கேரளாவையும் அதிரவைத்துள்ளது.