முன்கூட்டியே வருமான வரி செலுத்திய ஃப்ளிப்கார்ட் நிறுவனர் சச்சின் பன்சால்! | Flipkart co-founder Sachin Bansal pays Rs 699 crore income tax

வெளியிடப்பட்ட நேரம்: 08:00 (03/01/2019)

கடைசி தொடர்பு:08:00 (03/01/2019)

முன்கூட்டியே வருமான வரி செலுத்திய ஃப்ளிப்கார்ட் நிறுவனர் சச்சின் பன்சால்!

ஃபிளிப்கார்ட் நிறுவனத்தை நிறுவியவர்களில் ஒருவரான சச்சின் பன்சால் 699 கோடி ரூபாயை வருமான வரியாகச் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஃபிளிப்கார்ட் -  சச்சின் பன்சால்

இந்தியாவின் முன்னணி இணையதள வர்த்தக நிறுவனங்களில் ஒன்றாக ஃபிளிப்கார்ட் விளங்குகிறது. இதன் 77 சதவிகிதப் பங்குகளை அமெரிக்காவைச் சேர்ந்த வால்மார்ட் நிறுவனம் கடந்த வருடம் கைப்பற்றியது. இதற்காக 16 பில்லியன் டாலர்கள் செலவில் இந்தப் பங்குகள் வாங்கப்பட்டன. எனவே, இதன் மூலம் பெறப்பட்ட மூலதன ஆதாயங்களைப் பற்றி தெரிவிக்குமாறு சச்சின் பன்சால் மற்றும் பின்னி பன்சால் ஆகியோருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அவர்களுக்கு மட்டுமின்றி பங்குதாரர்களாக இருந்த 35 பேருக்கும் மற்றும் வால்மார்ட் நிறுவனத்துக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. அதற்கு முன்னரே செப்டம்பர் மாதத்தில் வால்மார்ட் சார்பில் ரூபாய் 7,440 கோடி ரூபாயை வருமான வரியாகச் செலுத்தப்பட்டு விட்டது. இந்த நிலையில்தான் தற்பொழுது 2018 - 2019 நிதியாண்டின் முதல் காலாண்டுக்காக சுமார் 699 கோடி ரூபாயை சச்சின் பன்சால் முன்கூட்டியே வருமான வரியாகச் செலுத்திய தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் மற்றொரு நிறுவனரான பின்னி பன்சால் எவ்வளவு வருமான வரி செலுத்தியுள்ளார் என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.