களமிறங்கியது `ஆபரேஷன் புரோக்கன் விண்டோ'- கிலியில் சபரிமலை கலவரக்காரர்கள் | sabarimala issue ; action against protesters

வெளியிடப்பட்ட நேரம்: 11:35 (04/01/2019)

கடைசி தொடர்பு:11:35 (04/01/2019)

களமிறங்கியது `ஆபரேஷன் புரோக்கன் விண்டோ'- கிலியில் சபரிமலை கலவரக்காரர்கள்

பரிமலையில் இரண்டு பெண்கள் நுழைந்ததையடுத்து கேரளத்தில் இந்து அமைப்பினர் நடத்திய போராட்டங்களைத் தொடர்ந்து ``ஆபரேஷன் புரோக்கன் விண்டோ" என்ற பெயரில் தனிப்படை உருவாக்கப்பட்டுள்ளது.

முழு அடைப்பு

சபரிமலையில் கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த பிந்து (44), மலப்புரத்தைச் சேர்ந்த கனக துர்கா (42) ஆகிய இரு பெண்களும் கடந்த 2-ம் தேதி அதிகாலை காவல்துறை பாதுகாப்புடன் சாமி தரிசனம் செய்தனர். அதைத் தொடர்ந்து கேரளத்தில் இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர். நேற்று முழு அடைப்பு போராட்டத்தில் பல இடங்களில் கலவரங்கள் வெடித்தன. சி.பி.எம். அலுவலகங்கள் எரிக்கப்பட்டன. பந்தளத்தில் சி.பி.எம். மற்றும் சபரிமலை கர்ம சமிதி அமைப்பினர் இடையே கல் வீச்சு மோதல் ஏற்பட்டது. அதில் சபரிமலை கர்ம சமிதி அமைப்பைச் சேர்ந்த சந்திரன் என்பவர் மரணம் அடைந்தார். அவரது உடல் பிரேதப் பரிசோதனை முடிந்து இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

முழு அடைப்பு

பாலக்காடு மாவட்டம் மற்றும் மஞ்சேஸ்வரம் பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இன்று பெரிய அளவு பிரச்னை எதுவும் ஏற்படவில்லை. இந்த நிலையில், கலவரம் செய்தவர்களைக் கைது செய்வதற்காகக் கேரளத்தின் 14 மாவட்டங்களிலும் உடைக்கப்பட்ட ஜன்னல் என்று பொருள்கொண்ட "ஆபரேஷன் புரோக்கன் விண்டோ" என்ற பெயரில் தனி போலீஸ் படை அமைக்கப்பட்டுள்ளது. கலவரம் நடந்த பகுதிகளில் உள்ள வீடியோ காட்சிகளை ஆய்வுசெய்து காவல்துறையினர் கைது நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.