`எங்களுக்கு ரூ.500 கோடி தரணும்!'- அனில் அம்பானி நாட்டை விட்டு வெளியேற தடைகோரி வழக்கு | Ericsson seeking contempt proceedings against Anil Ambani

வெளியிடப்பட்ட நேரம்: 12:05 (05/01/2019)

கடைசி தொடர்பு:12:05 (05/01/2019)

`எங்களுக்கு ரூ.500 கோடி தரணும்!'- அனில் அம்பானி நாட்டை விட்டு வெளியேற தடைகோரி வழக்கு

தங்களுக்கு வழங்க வேண்டிய தொகையை இன்னும் வழங்காமல் இருப்பதால் அனில் அம்பானி நாட்டை விட்டு வெளியேறத் தடை விதிக்க வேண்டும்'' என எரிக்ஸான் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது. 

அனில் அம்பானி

ரிலைன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் நடத்தி வந்த அனில் அம்பானி அந்நிறுவனம் நஷ்டமானதால் ரூ.45,000 கோடி நஷ்டமடைந்தார். பிறகு சில அலைவரிசைகளை அனில் அம்பானியின் சகோதரர் முகேஷ் அம்பானி 25,000 கோடி ரூபாய்க்கு வாங்கி ஜியோ சேவையை அறிமுகப்படுத்தினார். ஆனால், அதற்கு முன்னதாகப் பயன்படுத்திய அலைவரிசை கட்டணம் ரூ.2,900 தொலைத்தொடர்பு துறைக்கு செலுத்தப்படவில்லை. 

எரிக்ஸான்

இதில் எரிக்ஸான் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்ட அனில் அம்பானி அந்த நிறுவனத்துக்கு ரூ.1,600 கோடி தரவேண்டியுள்ளது. நீண்ட காலங்களாக இந்தத் தொகையை திருப்பித் தராத அனில் அம்பானியிடம் இருந்து அதை வசூல் செய்ய உச்சநீதிமன்றத்தை நாடியது எரிக்ஸான் நிறுவனம். பிறகு நீதிமன்றம் மூலம் தீர்வுகாணப்பட்டு முன்னதாக ரூ.550 கோடி ரூபாய் வழங்க வேண்டும் ரிலைன்ஸ் நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த நிலையில், இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் இரு முறை தீர்ப்பு வழங்கியும் அதை மதிக்காமல் இருந்த அனில் அம்பானி மற்றும் அவரது நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு தொடர வேண்டும் என்றும் அனில் அம்பானி நாட்டை விட்டு வெளியேறத் தடை விதித்து அவர் பணம் செலுத்தும் வரை சிவில் நீதிமன்றக் காவலில் வைக்க வேண்டும் என எரிக்ஸான் நிறுவனம் நேற்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.