`இரவு நேரத்தில் ரிலாக்ஸாக பேட்மின்டன்!’ - நிர்வாகிகளுடன் விளையாடிய மம்தா பானர்ஜி #Viralvideo | Mamata Banerjee plays badminton

வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (05/01/2019)

கடைசி தொடர்பு:17:53 (05/01/2019)

`இரவு நேரத்தில் ரிலாக்ஸாக பேட்மின்டன்!’ - நிர்வாகிகளுடன் விளையாடிய மம்தா பானர்ஜி #Viralvideo

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேட்மின்டன் விளையாடிய வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. 

மம்தா பானர்ஜி

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் மூன்றாவது அணி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகிறார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. இதற்காகத் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் உடன் தீவிரமாகக் கலந்தாலோசித்து வருகிறார். அதேநேரம் மேற்குவங்கத்தில் காலூன்றத் துடிக்கும் பா.ஜ.க-வை திணறடித்து வருகிறார் மம்தா. பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா கொல்கத்தாவில் மேற்கொள்ளவிருந்த மிகப் பெரிய ரத யாத்திரைக்குத் தடை விதித்துப் பரபரப்பை ஏற்படுத்தியது மம்தா தலைமையிலான மேற்கு வங்க அரசு. தடையை எதிர்த்து நீதிமன்றத்தை அணுகியுள்ளது பா.ஜ.க. இதனால் பா.ஜ.க-வின் ரத யாத்திரை இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.

மம்தா பானர்ஜி

இப்படி தீவிர அரசியலுக்கு மத்தியிலும் பேட்மின்டன் விளையாடி அசத்தியுள்ளார் மம்தா. பிர்பும் மாவட்டத்தில் தனது கட்சிக்காரர்களுடன் இரவு நேரத்தில் ரிலாக்ஸாகப் பேட்மின்டன் விளையாடியுள்ளார் மம்தா. இதை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுக்க இதைத் தனது ட்விட்டர் பக்கத்தில், ``வீ லவ் ஸ்போர்ட்ஸ்" என்ற கேப்ஷனுடன் பதிவிட்டுள்ளார் மம்தா. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அரசியலைத் தாண்டி மேலும் சில துறைகளில் வல்லவர் மம்தா. இசை பிரியர், கவிஞர், பாடகர் போன்ற பல திறமைகளை அவ்வப்போது வெளிக்காட்டி வருகிறார் மம்தா.

நீங்க எப்படி பீல் பண்றீங்க