வெளியிடப்பட்ட நேரம்: 19:36 (05/01/2019)

கடைசி தொடர்பு:20:03 (05/01/2019)

`உங்க ஓட்டுதான் எங்க கிஃப்ட்' - திருமணப் பத்திரிகையையும் விட்டுவைக்காத பா.ஜ.க!

திருமணப் பத்திரிகையில், 'பிரதமர் மோடிக்கு வாக்களிக்க வேண்டும்' என அச்சிட்டு அளித்துள்ளனர், குஜராத்தைச் சேர்ந்த மணமக்கள்.

பிரதமர் மோடி

மக்களவைத் தேர்தல் நெருங்குவதை அடுத்து, பா.ஜ.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பிரசார யுக்திகள்குறித்து தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, பிரதமர் மோடி அனைத்து மாநிலங்களிலும் உள்ள பா.ஜ.க தொண்டர்கள், தேர்தல் பொறுப்பாளர்களுடன் அவ்வப்போது உரையாடிவருகிறார். தேர்தல் பிரசாரத்தின் முதல் பொதுக்கூட்டத்தை கேரளாவில் உள்ள சபரிமலை கோயில் அமைந்துள்ள பத்தனம்திட்டா மாவட்டத்தில் நாளை அவர் தொடங்குகிறார். இதேபோல, முதல் தலைமுறை வாக்காளர்களைக் கவர பா.ஜ.க சார்பில் திட்டம் தீட்டப்பட்டுவருகிறது.

பா.ஜ.கவினர் திருமண பத்திரிக்கை

இந்நிலையில், 'நாடாளுமன்றத் தேர்தலில் மோடிக்கு வாக்களிக்க வேண்டும்' என வித்தியாசமான முயற்சியைக் கையில் எடுத்துள்ளனர் பா.ஜ.க-வினர்.குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த தவால் - ஜெயா ஆகியோருக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இதற்காக, மணமக்கள் சார்பில் வழங்கிய திருமண பத்திரிகையில், 'பிரதமர் மோடிக்கு வாக்களிக்க வேண்டும்' என்பதை வலியுறுத்தும் வகையில், ``2019 மக்களவை பொதுத்தேர்தலில் பிரதமர் மோடிக்கு வாக்களிக்கும் வாக்குதான் எங்களுக்குத் தரும் கிஃப்ட்" என்று அச்சடித்துள்ளனர்.

பா.ஜ.கவினர் திருமண பத்திரிக்கை

இதேபோல, மங்களூரைச் சேர்ந்த பா.ஜ.க-வினரும் தங்களது திருமணப் பத்திரிக்கையில் இவ்வாறு அச்சடித்துள்ளனர். இவர்களுக்கு ஒருபடி மேலே, பூஷன் என்னும் பா.ஜ.க தொண்டர், அவரது திருமணப் பத்திரிகையில் மோடி அரசின் திட்டங்களை அச்சடித்துக் கொடுத்துள்ளார்.

பா ஜ கவினர் திருமண பத்திரிக்கை

இது, பா.ஜ.க தொண்டர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றாலும், நெட்டிசன்கள் இதை விமர்சித்து கமென்டுட்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க