`நீங்கள் கொடுக்கும் உணவில் தரமில்லை' - கைதிகள் புகாரால் மாற்றப்பட்ட திகார் ஜெயில் மெனு! | New Food Menu For Tihar Jail prisoners, Will Feast On Pav Bhaji and More

வெளியிடப்பட்ட நேரம்: 21:15 (07/01/2019)

கடைசி தொடர்பு:21:34 (07/01/2019)

`நீங்கள் கொடுக்கும் உணவில் தரமில்லை' - கைதிகள் புகாரால் மாற்றப்பட்ட திகார் ஜெயில் மெனு!

திகார் சிறையில் கைதிகளின் வேண்டுகோளுக்கிணங்க புதிய உணவு முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

திகார் சிறை

திகார் சிறையில் வழங்கப்பட்டு வந்த உணவு வகைகள் தரமானதாக இல்லை எனக் கைதிகள் அவ்வப்போது புகார் அளித்து வந்துள்ளனர். இதுவரை வழங்கப்பட்டு வந்த அரிசி சாதம், கஞ்சி உள்ளிட்டவை தரமானது இல்லை எனப் புகார் எழுந்தது. மேலும், சில நேரங்களில் தரமில்லாத உணவால் கைதிகள் சாப்பிடாமலும், உணவுகளை வீணடித்தும் வந்துள்ளனர். இதனால் கைதிகளின் கோரிக்கைகளைப் பரிசீலித்த சிறைத்துறை நிர்வாகிகள் புத்தாண்டு முதல் புதிய மெனுக்களை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

பாவ் பஜ்ஜி

அதன்படி, அரிசி சாதம், கஞ்சி உள்ளிட்டவற்றுடன் புதிதாக, பாவ் பஜ்ஜி, உருளைக் கிழங்கு வகை உணவு, பெட்மி பூரி ஆகியவையும், மற்றும் சில காய்கறி வகை உணவுகளும் வழங்கப்பட்டு வருகிறது. ஜனவரி ஒன்றாம் தேதி முதல் இந்த உணவு வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதேபோல் காலை வேளையில் டீயுடன் இரண்டு பிஸ்கட்டும், வாரத்துக்கு ஒரு முறை உலர் திராட்சைகள் மற்றும் கீரைகள் வழங்கவும் சிறைத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

பெட்மி பூரி

இது குறித்து இந்தி ஊடகத்துக்குப் பேட்டியளித்த சிறைத்துறை அதிகாரிகள், ``தற்போது வழங்கப்பட்டு வரும் உணவில் தரம் குறையாவது பார்த்துக்கொள்ளப்படுகிறது. புதிய உணவுகள் சுவையாகவும், சூடாகவும் வழங்கப்படுவதால் கைதிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்" என்று தெரிவித்துள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க