வெளியிடப்பட்ட நேரம்: 13:11 (08/01/2019)

கடைசி தொடர்பு:13:11 (08/01/2019)

``சொன்னதைச் செய்யலைன்னா ஒரு ரொட்டி மட்டும்தான்!” - முசாஃபர்பூர் பாலியல் வன்முறை `பகீர்’!

``சொன்னதைச் செய்யலைன்னா ஒரு ரொட்டி மட்டும்தான்!” - முசாஃபர்பூர் பாலியல் வன்முறை `பகீர்’!

பிள்ளைகளைப் பிள்ளைகளாகப் பார்க்காமல் பாலியல் பண்டமாகப் பார்க்கும் தேசத்தில் இருப்பதென்பது சாபக்கேடு. பாலியல் கல்வியின் தேவை கலாசாரச் சீர்கேடு என நிராகரிக்கப்படுகிறது. ஆனால், நிராகரிக்கும் கலாசாரங்களும், அதன் காவலர்களும் சிறுமிகள் மற்றும் பெண்களின் மீது நிகழ்த்தப்படும் இப்படியான பாலியல் வன்முறைகளை எதிர்த்துக் கேள்வி எழுப்புவதில்லை. அந்தக் கலாசாரங்களையும் நாட்டின் அதிகார மையங்களே கட்டுப்படுத்துகின்றது. அந்த அதிகார மையத்தைச் சேர்ந்தவர்களே பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களாக இருக்கும்போது, சட்டம் அதிகாரத்தின் பக்கமே வளைந்துபோவதாக அமைந்துவிடுகிறது.

ஆட்சி அதிகாரத்தைச் சேர்ந்த பல நபர்களுக்குத் தொடர்பிருப்பதாகச் சொல்லப்படும் பீகார் மாநிலம் முசாஃபர்பூர் அரசு சிறார் இல்ல பாலியல் வன்கொடுமை  விவகாரத்தில் தற்போது 73 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அதில், பல்வேறு பதைபதைக்க வைக்கும் வகையிலான தகவல்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அந்த இல்லத்தில் வசித்த 42 சிறுமிகளில் 34 சிறுமிகள் வரை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பது மருத்துவ அறிக்கையில் தெரியவந்தது. சிறார் இல்லம் தற்போது தரைமட்டமாக பாலியல் புகார்இடிக்கப்பட்டிருக்கும் சூழலில் இல்லத்தின் நிர்வாகியான பிரஜேஷ் தாகூர் தற்போது பீகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பல்வேறு அரசியல் தலைவர்களுடன் அவருக்குத் தொடர்பு உண்டு என்பதால் விசாரணையில் தலையீடுகளைத் தவிர்க்க அவரை வேறு மாநிலச் சிறைக்கு மாற்ற சி.பி.சி.ஐ.டி. போலீஸார் தரப்பிலிருந்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே சி.பி.சி.ஐ.டி. இந்த விவகாரத்தில் பிரஜேஷ் தாகூர் உட்பட 21 பேர் மீது குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்திருக்கிறது. அந்தக் குற்றப்பத்திரிகையில் அவர், சிறார் இல்லத்தில் இருந்த சிறுமிகளைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தாகூரின் விருந்தினர்கள் முன்பு சிறுமிகளுக்கு ஆபாச உடைகளை உடுத்தி, அவர்களை  ஆடவைத்ததாகவும், சிறுமிகளுக்குப் போதை ஊசிகளைச் செலுத்தி அவர்களை தாகூருக்கு நெருக்கமானவர்கள், பாலியல் வன்புணர்வு செய்ததாகவும் சிலநேரங்களில் சிறார் இல்லத்தில் இருந்த ஆசிரியர்களே அத்தகைய செயல்களில் ஈடுபட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதற்குப் பணியாத சிறுமிகள் கொடுமைபடுத்தப்பட்டிருக்கிறார்கள். ஒரு நாளைக்கு ஒரு ரொட்டி மட்டுமே தரப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டிருக்கிறார்கள். சில நேரங்களில் சிறுமிகளுக்கு உணவு வழங்காமல் மறுக்கப்பட்டிருக்கிறது. இதுபோன்று இன்னும் விவரிக்கப்பட்ட பயங்கரங்கள், அந்தக் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளன.   

பாலியல் புகாரால் இடிக்கப்படும் முஸாபஃர்பூர் சிறார் இல்லம்

முசாஃபர்பூர் இல்ல பயங்கரத்தை அடுத்து நாடு முழுவதும் உள்ள  சிறார் இல்லங்களில் சமூகத் தணிக்கை நடத்த அரசு உத்தரவு பிறப்பித்தது. தமிழகத்தில் அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன்பே சென்னை ஆவடி அருகே உள்ள ஒரு சிறார் காப்பகத்தில் நடந்த முசாஃபர்பூர் போன்றதொரு குற்றம் நடந்திருப்பது வெளிச்சத்துக்கு வந்தது.

``அரசு உத்தரவிட்ட சமூகத் தணிக்கை நடவடிக்கையின் அரசு சிறார் இல்ல பாலியல் புகார் பற்றி பாடம் நாராயணன்தற்போதைய நிலை என்ன?" என்பது பற்றி சமூகச் செயற்பாட்டாளர் `பாடம்’ நாராயணனிடம் கேட்டோம். அவர், ``அரசு இயந்திரம் இந்தச் சமூகத் தணிக்கையை அலட்சியமாகவே கையாள்கிறது. இத்தனைக்கும் அண்மையில் திருவண்ணமாலையில் உள்ள அரசுக் காப்பகங்களில் நடந்த வன்கொடுமைகளை அந்த மாவட்ட ஆட்சியரே வெளிக்கொண்டு வந்தார். ஆனால், நிறைய காப்பகங்களில் அரசு அவர்களுக்குத் தெரிந்தவர்களைக் கொண்டே தணிக்கை நடத்துகிறது. அப்படி நடந்த தணிக்கையிலும் சில காப்பகங்களில் குற்றங்கள் நடப்பது வெளிவந்துள்ளது. ஆனால், அவை பெரிதுபடுத்தப்படாமலும், பேசப்படாமலும் போய் விடுகின்றன. அத்தகைய தணிக்கைகள், பெயரளவுக்கும், கடமைக்காகவும் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு நடத்தப்படுவதால், அங்கு நடைபெறும் குற்றங்களை எளிதில் கண்டறிய முடிவதில்லை. பிள்ளைகளைக் காப்பாற்றுவதற்காக அல்லாமல் அரசின் பெயரைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவே இதுபோன்ற சம்பிரதாய தணிக்கைகள் நடத்தப்பட்டு வருகின்றன” என்றார்.

இன்னும் எத்தனை குழந்தைகளைத்தான் ரொட்டித் துண்டுகளின் மீது பேரம் பேசப் போகிறார்கள்?.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்