'பொதுப் பிரிவினருக்கு 10 சதவிகிதம் இடஒதுக்கீடு !'- மக்களவையில் நிறைவேறியது மசோதா | economical based reservation amended in lok sabha

வெளியிடப்பட்ட நேரம்: 01:00 (09/01/2019)

கடைசி தொடர்பு:01:00 (09/01/2019)

'பொதுப் பிரிவினருக்கு 10 சதவிகிதம் இடஒதுக்கீடு !'- மக்களவையில் நிறைவேறியது மசோதா

ந்தியா முழுவதும் சமூகம் மற்றும் கல்வி ரீதியாகப் பின் தங்கியவர்களுக்கான  இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகின்றது,   இந்நிலையில்  பொதுப்பிரிவில்  பொருளாதார ரீதியாகப் பின் தங்கியவர்களுக்கான 10% இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட திருத்த மசோதா நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. மக்களவையில் 323 வாக்குகள் ஆதரவாகப் பெற்று மசோதா நிறைவேறியுள்ளது.

நாடாளுமன்றம்

இதற்கான மசோதாவை மத்திய சமூக நலத்துறை அமைச்சர் தாவர் சந்த் கெஹலட் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதாவைத் தக்கல் செய்தார். இந்த மசோதாவை அறிமுகப்படுத்திப்  பேசிய மத்திய சமூக நலத்துறை அமைச்சர் ” இந்த 10 சதவிகிதம் இடஒதுக்கிடானது பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பிராமிண், படேல், ஜாட்,பனியா மற்றும் இதுவரை இட ஒதுக்கீட்டை அனுபவிக்காத முஸ்லிம்கள், கிருஸ்துவர்கள் என அனைவரையும் இது உள்ளடக்கியுள்ளது” என்றார்.

 

அதன் பின்னர், இந்த மசோதா தொடர்பான விவாதங்கள் மக்களவையில் நடைபெற்றன.  அந்த விவாதத்தில் மக்களவையில்  அ.தி.மு.கவின் சார்பாக பங்கேற்ற  தம்பிதுரை . பொருளாதார அடிப்படையில்  இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை  எதிர்த்துப் பேசினார். அ.தி.மு.கவை சார்ந்த மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பான விவாதத்தின் போது எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.

இடஒதுக்கீடு மசோதா விவாதம்

இந்நிலையில் பொருளாதார ரீதியான பின்தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்க,  இந்திய அரசியலமைப்பில் 124-வது சட்ட திருத்தம் கொண்டுவர மக்களவையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் 323 வாக்குகளை ஆதரவாகப் பெற்று இந்த மசோதா மக்களவையில்  நிறைவேறியது.

 

இந்த விவாதங்களில் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த  ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோரும் பங்கேற்றனர். அதேபோல் இந்த  மசோதாவைத் தமிழகத்தை சார்ந்த தி.மு.க, பா.ம.க உள்ளிட பல்வேறு கட்சிகளைச் சார்ந்தவர்களும் எதிர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.