வெளியிடப்பட்ட நேரம்: 14:40 (09/01/2019)

கடைசி தொடர்பு:14:40 (09/01/2019)

`வாவர் மசூதிக்குள் பெண்கள் செல்ல எந்தத் தடையும் இல்லை!' - நிர்வாகம் அறிவிப்பு 

பரிமலையில் பெண்கள் நுழைந்து வழிபாடு நடத்தியதைத் தொடர்ந்து 3 பெண்கள் உள்ளிட்ட 6 பேர்  எருமேலியில் உள்ள வாவர் மசூதிக்குள் செல்ல முயன்றதாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள்  இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது. 

வாவர் மசூதி

இதையடுத்து, எருமேலி நைனார் ஜும்மா மசூதி என்று அழைக்கப்படும் வாவர் மசூதியின் நிர்வாகக்குழு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், `` பெண் ஐயப்ப பக்தர்கள் வாவர் மசூதிக்குள் செல்ல எந்தத் தடையும் இல்லை. சபரிமலைக்குப் பெண்கள் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளிக்கும் முன்னரே இந்த மசூதிக்குள் பெண்கள் சென்றுகொண்டுதான் இருக்கிறார்கள். தொழுகை நடத்தும் இடத்துக்குப் பெண்கள் செல்ல மட்டுமே தடை உள்ளது. சபரிமலைக்கு வரும் பெண்கள் அளிக்கும் காணிக்கைகள். தேங்காய், பழம் கூட ஏற்றுக் கொள்ளப்படுகிறது. '' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்து - இஸ்லாமிய மக்களின் நல்லிணக்கத்துக்கு உதாரணமாக ஐயப்பன்- வாவர் நட்பு பார்க்கப்படுகிறது. இதனால் சபரிமலையில் தெய்வமாக ஐயப்பன் அமர்ந்ததையடுத்து, அவரின் வளர்ப்புத் தந்தையான பந்தளம் மன்னர் வாவருக்கும் எருமேலியில் மசூதி கட்டினார். சபரிமலை செல்லும் பக்தர்கள் இங்கும் சென்று வழிபடுவதும் காலம் காலமாக கடைப்பிடிக்கப்படும் மரபு. 

மசூதிக்குச் செல்ல முயன்றவர்கள் மீது தடையை மீறிய நுழைய முற்பட்டதாகவும் இரு மதப்பிரிவுகளுக்கிடையே விஷமத்தை விதைக்க முயன்றதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கைதான பெண்கள், சபரிமலையில் பெண்கள் நுழைந்ததற்குப் பதிலடி கொடுக்கவே வாவர் மசூதிக்குள் நுழைய முற்பட்டதாகத் தெரிவித்துள்ளனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க