வெளியிடப்பட்ட நேரம்: 18:50 (09/01/2019)

கடைசி தொடர்பு:19:04 (09/01/2019)

முதன்முறையாக ஆண் வீரர்கள் குழுவை தலைமை தாங்கும் பெண்கள்! - இந்திய ராணுவ வரலாற்றின் மைல் கல் #ArmyDay

இந்திய வரலாற்றில் முதன் முறையாக ராணுவ தின அணிவகுப்பில் 114 ஆண்கள் கொண்ட படையை ஒரு பெண் அதிகாரி வழிநடத்தப் போகிறார்.  

கஸ்தூரி
 

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 15-ம் இந்திய ராணுவ தினம் கொண்டாடப்படுகிறது. ஜெனரல் கே.எம்.கரியப்பா சுதந்திர இந்தியாவின் முதல் ராணுவ தளபதியாக 1948-ம் ஆண்டு பொறுப்பேற்றார். அந்த ஆண்டிலிருந்து ராணுவ தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. தலைநகர் டெல்லியில் பெரியளவில் விழாக்கள் நடத்தப்படும். அந்த விழாவில் நாட்டின் பிரதமர், முப்படை அதிகாரிகள், அமைச்சர்கள் கலந்துகொண்டு பார்வையிடுவார்கள். இந்த ஆண்டு ஸ்பெஷல் என்னவென்றால், இந்திய ராணுவத்தின் IASC (Indian Army Service Corps) படை 23 ஆண்டுகளுக்குப் பிறகு ராணுவ தின அணிவகுப்பில் கலந்துகொள்கின்றன. இதில் இன்னொரு ஸ்பெஷலும் இருக்கிறது. IASC படையினரைத் தலைமை தாங்கப்போவது ஒரு பெண் அதிகாரி. ஆம், லெப்டினென்ட் பாவன கஸ்தூரிதான் ராணுவ தின அணிவகுப்பில் 114 வீரர்கள் கொண்ட IASC படையை வழிநடத்தப்போகிறவர். இது இந்திய வரலாற்றில் முக்கியமான முடிவு.  

பாவனா கஸ்தூரி
 

கடந்த 2015-ம் ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் கேப்டன் திவ்யா அஜித், பெண் அதிகாரிகள் அடங்கிய குழுவுக்குத் தலைமை தாங்கினார். தற்போது ராணுவ தின அணிவகுப்பில் 144 ஆண் அதிகாரிகள் அடங்கிய படைக்கு லெப்டினென்ட் பாவன கஸ்தூரி தலைமை வகிக்கிறார். 

ஒத்திகை அணிவகுப்பு முடித்த பின்னர்  ANI ஊடகத்துக்குப் பேட்டியளித்த கஸ்தூரி,  `ராணுவ தின அணிவகுப்பில், சர்வீஸ் கார்ப்ஸ் ( IASC) படையைத் தலைமை தாங்குவதை எண்ணி பெருமிதம் கொள்கிறேன். இது எனக்குப் பெருமை மட்டுமல்ல மரியாதை தருகிற விஷயம். 23 ஆண்டுகளுக்குப் பிறகு IASC படை குடியரசு தின அணிவகுப்பில் பங்குபெறுகிறது. ஜனவரி 15-ம் தேதி அசத்தல் பெர்ஃபார்மன்ஸ் கொடுக்க வேண்டும் என்பதற்காக எங்கள் 144 வீரர்களும் கடுமையாக பயிற்சி மேற்கொண்டுள்ளோம். ஆண்கள் அடங்கிய ராணுவ படைக்குப் பெண் தலைமை தாங்கி வழிநடத்தப்போவது இதுவே முதல் முறை. நினைக்கும்போதே பெருமையாக உள்ளது” என்கிறார் பூரிப்புடன். 

ராணுவ
 

கஸ்தூரி மட்டுமில்லை இம்முறை 33 ஆண்கள் அடங்கிய ராணுவத்தின் டேர்டெவில்ஸ் மோட்டார் சைக்கிள் அணிக்கு கேப்டன் ஷிக்கா தலைமைத் தாங்குகிறார். இந்த ராணுவ தினம் மட்டுமின்றி குடியரசு தின அணிவகுப்பிலும் பங்குபெறுகிறது. பைக்கில் இருந்தபடியே பிரதமர் உள்ளிட்ட விருந்தினர்களுக்கு ஷிக்கா சல்யூட் அடிப்பார்.  HatsOff கஸ்தூரி, ஷிக்கா! 

நீங்க எப்படி பீல் பண்றீங்க