வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (09/01/2019)

கடைசி தொடர்பு:23:30 (09/01/2019)

ஏர் இந்தியா பங்குகளை ரூ.7,000 கோடிக்கு விற்க முடிவு!

அடுத்த நிதியாண்டில் இதன் பங்குகளை விற்பதற்கான வேலையைத் துரிதப்படுத்தியுள்ளார்கள். அடுத்த நிதியாண்டில் இந்த நிறுவனத்துக்கான முதலீடுகளை நிறுத்திவிட்டு நிறுவனத்துக்குச் சொந்தமான நிலங்களையும், அதோடு இணைந்த பிற நிறுவனங்களையும் விற்று கடன் சுமையைக் குறைக்க முடிவெடுக்கப்பட்டது. 

பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவின் பங்குகளை அடுத்த நிதியாண்டில் ரூ.7,000 கோடிக்கு (அமெரிக்க டாலர் மதிப்பில் 1 பில்லியன்) விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. இந்த நிறுவனத்தை லாபத்தில் இயங்கவைக்க மத்திய அரசு போதுமான நிதியை வழங்கியும் லாபத்தில் இயங்க முடியவில்லை. தற்போது இந்த நிறுவனத்தின் கடன் சுமை ரூ.55,000 கோடியாக உள்ளது. கடன் சுமையைக் குறைப்பதற்காக, கடந்த நவம்பர் இறுதியில், இந்த நிறுவனத்தின் மொத்தக் கடனில் ரூ.29,000 கோடியை மத்திய நிதியமைச்சகம், இதன் இன்னொரு சிறப்பு நிறுவனத்துக்கு மாற்ற ஒப்புதல் தந்தது. 

ஏர் இந்தியா

இச்சூழலில்தான் அடுத்த நிதியாண்டில் இதன் பங்குகளை விற்பதற்கான வேலையை துரிதப்படுத்தியுள்ளார்கள். அடுத்த நிதியாண்டில் இந்த நிறுவனத்துக்கான முதலீடுகளை நிறுத்திவிட்டு நிறுவனத்துக்குச் சொந்தமான நிலங்களையும், அதோடு இணைந்த பிற நிறுவனங்களையும் விற்று கடன் சுமையைக் குறைக்க முடிவெடுக்கப்பட்டது. 

முன்னதாக, கடந்த ஆண்டு மே மாதத்தில், ஏர் இந்தியா நிறுவனத்தின் 76 சதவிகிதப் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய ஏற்கெனவே முடிவுசெய்யப்பட்டது. அப்போது அந்த நிறுவனத்துக்கு இருந்த ரூ.24,000 கோடி கடனையும் சேர்த்து வாங்க வேண்டுமென நிபந்தனை விதிக்கப்பட்டது. ஆனால், அந்த நிபந்தனைக்குட்பட்டு நிறுவனத்தை வாங்க யாரும் முன்வரவில்லை. இதையடுத்து, விற்பனை முடிவு தள்ளிவைக்கப்பட்டது.