`இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் அடிப்படையை மீறுகிறது’ - 10 சதவிகித இடஒதுக்கீடுக்கு எதிராக வழக்கு | The case file against 10 reservation bill in supreme court

வெளியிடப்பட்ட நேரம்: 03:00 (11/01/2019)

கடைசி தொடர்பு:07:51 (11/01/2019)

`இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் அடிப்படையை மீறுகிறது’ - 10 சதவிகித இடஒதுக்கீடுக்கு எதிராக வழக்கு

ந்தியாவில் கல்வி மற்றும் சமூக ரீதியாக பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வரும் நிலையில். புதிதாகப் பொருளாதார ரீதியாகப் பின் தங்கியவர்களுக்கு 10% இடஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் சட்டத் திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. மக்களவையில் ஜனவரி 8-ம் தேதி இந்த மசோதா குறித்தான விவாதங்களும் அதன் பின்னர் வாக்கெடுப்புகளும் நடத்தப்பட்ட நிலையில் 323 வாக்குகள் ஆதரவாகப் பெற்று பொருளாதார ரீதியான இடஒதுகீட்டு மசோதா மக்களவையில் நிறைவேறியது.

இடஒதுக்கீடு மசோதா

மாநிலங்களவையில் தமிழகத்தைச் சார்ந்த தி.மு.க., அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளின் கடுமையான எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பத்து மணி நேரத்துக்கும் அதிகமான விவாதங்களுக்குப் பிறகு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 165 வாக்குகள் ஆதரவாகப் பெற்று மாநிலங்களவையிலும் நிறைவேறியது. இந்த இடஒதுக்கீட்டு மசோதாவை பல்வேறு கட்சிகளைச் சார்ந்தவர்களும், சமூக ஆர்வலர்களும் இந்தப் பொருளாதார ரீதியான இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

உச்ச நீதிமன்றம்

இந்த நிலையில், சமத்துவத்துக்கான இளைஞர்கள் அமைப்பும், கவுஷல் காந்த் மிஷ்ரா என்பவரும் பொதுப் பிரிவினருக்கு  பொருளாதார அடிப்படையிலான 10% இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில்  மனுத் தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில் இடஒதுக்கீட்டுக்கு பொருளாதாரம் என்பதை அளவுகோலாக வைக்க முடியாது என்றும். இந்த மசோதா இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் அடிப்படை அம்சத்தை மீறுகின்றது. எனவே இதை ரத்து செய்யக் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளனர்.