வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (11/01/2019)

கடைசி தொடர்பு:17:16 (11/01/2019)

`இப்படியும் நடக்கிறது!’ - உ.பி-யை அதிர்ச்சியடைய வைத்த காவலர்களின் செயல்!

இந்தியா முழுவதிலும் உள்ள அதிகாரிகள் பல விஷயங்களில் ஊழல் செய்துள்ளதாக நாம் கேட்டிருப்போம். மக்களுக்கு வழங்கும் பொருள்கள், மேம்பாலங்கள், கட்டடங்கள், உணவுகள், உடை போன்ற அனைத்து விஷயங்களிலும் ஊழல் செய்ததுண்டு. ஆனால், உத்தரப்பிரதேசத்தில் நடந்துள்ள ஒரு முறைகேடு அம்மாநிலத்தையே மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. அங்கு இறந்தவரின் உடலிலும் காவலர்கள் முறைகேடு செய்துள்ளனர். 

தீ

உத்தரப்பிரதேச மாநிலம் பாஹ்பட் பகுதியில் அடையாளம் தெரியாமல் இறந்த ஒருவரின் உடலைத் தகனம் செய்ய அப்பகுதி போலீஸாருக்கு காவல்துறை சார்பாக 2,700 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இது இறந்தவரின் உடலை மறைக்க ரூ.300, மருத்துவமனையிலிருந்து தகனம் செய்யும் இடத்துக்குக் கொண்டு செல்ல ரூ.400 பிற செலவுகளுக்காக ரூ.2,000 என்ற அடிப்படையில் பணம் வழங்கப்பட்டுள்ளது. 

உ.பி காவல்துறை

ஆனால், இந்தப் பணத்தை மொத்தமாக தாங்களே எடுத்துக்கொண்ட காவலர்கள் அடையாளம் தெரியாதவரின் உடலை டையர், பிளாஸ்டிக் பொருள்கள் போன்ற தேவையில்லாத குப்பைகளுடன் சேர்த்துவைத்து எரித்துள்ளனர். இந்தத் தகவல் எரிக்கப்பட்ட இடத்துக்கு அருகில் இருந்தவர்கள் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதன்பின் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. முறைகேடுகளையும் தாண்டி இது மனிதாபிமானமற்ற செயல் எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.