காங்கிரஸ் இல்லாமல் உருவான புதிய கூட்டணி..! | SP and BSp made general election alliance

வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (13/01/2019)

கடைசி தொடர்பு:07:00 (13/01/2019)

காங்கிரஸ் இல்லாமல் உருவான புதிய கூட்டணி..!

த்திர பிரதேச மாநிலத்தில் இந்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் ஆட்சியில் உள்ள பி.ஜே.பி வீழ்த்துவதற்காக  அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடியும், பகுஜன் சமாஜ் கட்சியும் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

அகிலேஷ் யாதவ்

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் மாநில கட்சிகளுக்கு இடையேயான வலுவான கூட்டணியை உருவாக்கினால் வெற்றி பெற முடியும் என்ற நோக்கோடு, பல மாநிலக் கட்சி களோடும் காங்கிரஸ் கூட்டணி பேச்சு வார்த்தைகளை நடத்தி வருகின்றது. கடந்த டிசம்பர் 10-ம் தேதி டெல்லியில் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது அதில் தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ்.,  தெலுங்கு தேசம், தேசியவாத காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட பல கட்சியைச் சார்ந்தவர்களும் பங்கேற்றனர்.

மாயாவதி , அகிலேஷ் யாதவ்

இந்நிலையில் அகிலேஷ் யாதவும் , மாயாவாதியும் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட நிலையில், . இரண்டு கட்சிகளும் இணைந்து உத்திர பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் ஒவ்வொருவரும்  தலா 38 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர். நேரு குடும்பத்தின் கோட்டையாகக் கருதப்படும் உத்திர பிரதேசத்தில் உள்ள ரேபரேலி மற்றும் அமேதி ஆகிய இரு தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த மாட்டோம் என முடிவு செய்துள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி

ஏன் உங்கள் கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற வில்லை என மாயாவதியிடம் செய்தியாளர்கள் கேட்ட போது , “ இந்திய விடுதலைக்குப் பிறகு மத்தியிலும் மற்ற மாநிலங்களிலும் காங்கிரஸ் தான் பரவலாக ஆட்சியில் இருந்தது ஆனால் ஊழலும் வறுமையும் ஒழிந்தபாடில்லை” என்றார். அகிலேஷ் யாதவ் , மாயாவதி தேர்தல் கூட்டணிக் குறித்து துபாயில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராகுல் காந்தி, “ பகுஜன் சமாஜ் கட்சிக்கும் , சமாஜ்வாடிக்கும் தங்களின் கூட்டணிகளை குறித்து முடிவு செய்ய உரிமையுள்ளது. மாயாவதி , அகிலேஜ் யாதவின் இந்த முடிவுகளுக்குப் பிறகு உத்திர பிரதேச தேர்தலில் காங்கிரஸ் தனித்து நிற்கும் “ என்றார்.