வெளியிடப்பட்ட நேரம்: 12:30 (13/01/2019)

கடைசி தொடர்பு:12:30 (13/01/2019)

``இதேநிலை நீடித்தால்....!” சுரங்க மீட்புப் பணிகள் பணிகள் குறித்த கவலையில் மேகாலயா அரசு

மேகாலயாவில் பல நிலக்கரி சுரங்கங்கள் உள்ளன. அவற்றில் தகுந்த அனுமதி இல்லாமல் பல சுரங்கங்கள் சட்டவிரோதமான முறையில் செயல்பட்டு வருகின்றன. அப்படி ஜைன்டியா மாவட்டத்தின் சான் என்ற கிராமத்தில் உள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்தில் கடந்த மாதம் இதே நாள் (13-ம் தேதி) சுரங்கத்துக்கு அருகே ஓடும் லைடெயின் ஆற்றில் உள்ள தண்ணீர் சுரங்கத்துக்குள் புகுந்தது. 

மேகாலயா சுரங்க மீட்புப் பணிகள்

சுமார் 370 அடி ஆழம் உள்ள அந்தச் சுரங்கத்தில் 70 அடி வரையிலும் தண்ணீர் உள்ளது. சுரங்கத்துக்குள் தண்ணீர் புகுந்த உடனேயே அங்கிருந்த ஐந்து தொழிலாளர்கள் வெளியில் சென்றுவிட்டனர். ஆனால், 15 பேர் உள்ளேயே மாட்டிக்கொண்டுள்ளனர். கடந்த ஒரு மாத காலமாக உள்ளே சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை ஒருவர் கூட மீட்கப் படவில்லை. உள்ளே தொழிலாளர்கள் எங்கு உள்ளனர் அவர்களின் நிலை என்ன போன்ற எந்தத் தகவலும் இதுவரை தெரியவில்லை. 

மேகாலயா சுரங்க மீட்புப் பணிகள்

கடற்படை வீரர்கள், தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள், கோல் இந்தியா வீரர்கள், ஒடிஷா தீயணைப்பு துறையினர், தனியார் அமைப்பினர் போன்ற 200-க்கும் மேற்பட்ட வீரர்கள் இந்த மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். சுரங்கத்தில் இருந்து இதுவரை லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் இருந்தும் உள்ளே தேங்கியுள்ள நீரின் அளவு இன்னும் குறையவில்லை என மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். 

மேகாலயா சுரங்க மீட்புப் பணிகள்

இன்று வரை மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன ஆனால் ஒரு தொழிலாளிகூட இன்னும் மீட்கப்படவில்லை. இதே நிலை தொடர்ந்தால் வரும் நாள்களில் இந்த மீட்புப் பணிகளை முடித்துக்கொள்ளும் நிலை உருவாகலாம் என மேகாலயா அரசு தெரிவித்துள்ளது.