வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (14/01/2019)

கடைசி தொடர்பு:14:00 (14/01/2019)

அலுவலகங்களில் பாலியல் துன்புறுத்தல்கள்! - ஒரு வருடத்தில் 169 புகார்கள் பதிவு

அரசு அலுவலகத்தில் பணி புரியும் பெண்கள், தனியார் நிறுவனத்தில் பணி புரியும் பெண்கள் போன்றவர்களுக்கு அலுவலகத்தில் ஏற்படும் பாலியல் ரீதியிலான துன்பங்கள் குறித்து புகார் அளிக்க ஷீ பாக்ஸ் (SHe- Box) என்ற இளையதள பக்கம் கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி தொடங்கிவைத்தார்.

ஷீ பாக்ஸ்

இந்த இணையதள பக்கம் தொடங்கப்பட்ட பிறகு, 2017-ம் ஆண்டு மட்டும் தனியார் நிறுவனங்களில் நடந்த பாலியல் தொல்லைகள் குறித்து 169 புகார்கள் வந்துள்ளதாகப் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்

இதுகுறித்து அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கின்ற பாலியல் தொல்லைகளுக்குப் புகார் அளிக்க ஷீ-பாக்ஸ் (SHe-Box) என்ற வலைதளம் செயல்பட்டு வருகிறது. இந்தப் பக்கத்தில் 2017-ம் ஆண்டு மட்டும் 169 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் அதிகபட்சமாக மகாராஷ்ட்ராவில் 33 புகார்களும் டெல்லியில் 23 புகார்களும் பதிவாகியுள்ளன.

பாலியல் துன்புருத்தல்

கடந்த ஆண்டில் (2018) மத்திய அமைச்சகங்களில் 141 பாலியல் புகார்கள் பதிவாகியுள்ளது. குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டு அமைச்சகத்தால் இதில் 45 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன. இதில் அதிகபட்சமாக நிதி அமைச்சகத்தில் 21 புகார்களும், தொலைத்தொடர்பு மற்றும் பாதுகாப்பு அமைச்சகங்களில் 16 புகார்களும் பதிவாகியுள்ளன’ என்று கூறப்பட்டுள்ளது.