ஃபேஸ்புக்கில் பெண்கள் குறித்து சர்ச்சைப் பேச்சு - வாங்கிக்கட்டிகொண்ட பேராசிரியர்! | Jadavpur University professor compares virgin girls to ‘sealed bottles’

வெளியிடப்பட்ட நேரம்: 03:15 (15/01/2019)

கடைசி தொடர்பு:03:15 (15/01/2019)

ஃபேஸ்புக்கில் பெண்கள் குறித்து சர்ச்சைப் பேச்சு - வாங்கிக்கட்டிகொண்ட பேராசிரியர்!

ஃபேஸ்புக்கில் பெண்கள் குறித்து சர்ச்சைப் பேச்சு - வாங்கிக்கட்டிகொண்ட பேராசிரியர்!

கொல்கத்தாவிலுள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் கனக் சர்கார் என்பவர், அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் பெண்கள் குறித்து இழிவாகப்பதிவு செய்தது அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. அவரது பதிவில், 'நீங்கள் சீல் உடைக்கப்பட்ட குளிர் பானங்களை விலை கொடுத்து வாங்கவோ, பேக்கிங் உடைக்கப்பட்ட பிஸ்கட் பாக்கெட்டுகளை வாங்கவோ ஆசைப்படுவீர்களா' என்று கேள்வியெழுப்பி இருந்தார். 

கனக் சர்கார்

'கல்வி கற்ற இளைஞர்களுக்கு மதிப்புமிக்க சமூக ஆலோசனைகள்' என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ள ஃபேஸ்புக் பதிவில், 'ஆண்கள் முட்டாள்களாக இருக்கிறார்கள். நீங்கள் சீல் உடைக்கப்பட்ட குளிர் பானங்களை விலைகொடுத்து வாங்கவோ, பேக்கிங் உடைக்கப்பட்ட பிஸ்கட் பாக்கெட்டுகளை வாங்கவோ ஆசைப்படுவீர்களா? இதனை உங்கள் மனைவியோடு பொருத்திப்பாருங்கள்' என்று பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் எழுதியிருந்தார்.

பெண்கள் பற்றி புகழ்பெற்ற ஒரு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஒருவர், மிகவும் கொச்சையாக, கீழ்த்தரமாக எழுதியிருப்பது பலரையும் அதிர்ச்சியடையச் செய்தது. உடனே அவரை எதிர்த்து பலரும், 'இவரெல்லாம் ஒரு பல்கலைக்கழகப் பேராசிரியரா?', 'இவரால் புகழ்மிக்க பல்கலைக்கழகத்துக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது' 'இவர் தொடர்ந்து இப்படித்தான் பதிவிட்டு வருகிறார்' என்றெல்லாம் எதிர்த்து கமென்ட் செய்தனர். அவரது பதிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து அதனை நீக்கிவிட்டார். அடுத்த பதிவில், தான் தனது சொந்த கருத்தையே வெளிப்படுத்தியிருப்பதாகவும், யாரையும் குறிப்பிட்டு குறை சொல்லவில்லையென்றும், தனது பழைய பதிவுகள் பலவற்றில் பெண்களைப் பாராட்டி எழுதியிருப்பதாகவும்கூறி, அவற்றில் சில பதிவுகளை எடுத்து அடுத்தடுத்து பதிவேற்றியுள்ளார். 

முகநூல் பதிவு

முகநூல் பதிவு

முகநூல் பதிவு

பழைய பதிவுகளிலும் பெண்கள் குறித்து பாலியல் ரீதியாக கொச்சைப்படுத்தும் பதிவுகள் இருப்பது தெரியவந்தது.  இப்படி பெண்களை குறித்தே தொடர்ச்சியாக சர்ச்சையாக கீழ்த்தரமாக எழுதிவந்த அவரைப் பலரும் கண்டித்திருக்கிறார்கள். 

முகநூல் பதிவு

இதுகுறித்து அவர் கூறும்போது, தனக்கு இப்படியெல்லாம் எழுதுவதற்கு உரிமை உள்ளதென்றும், தகவல்தொழில்நுட்பச் சட்டம் 66ஏ, சமூக வலைத்தளங்களில் ஒருவரது கருத்தைத் தெரிவிக்கும் உரிமையைக் கொடுத்துள்ளது என்றும் கூறியிருக்கிறார். `அந்த முகநூல் பதிவு சில மனிதர்களின் மனநிலை பிறழ்வையே காட்டுகிறது. சிலர் பெண்களை இந்த விதத்தில் மட்டுமேதான் பார்க்கிறார்கள். அவர் நன்கு படித்தவர், பொறுப்பான பதவியில் இருப்பவர் என்பதே இதில் வருந்தத்தக்க விஷயம்’ என பெண்கள் அமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர். ஒரு பெண் முதல்வராக இருக்கும் மாநிலத்தில், ஒரு பேராசிரியர், பெண்களின் கன்னித்தன்மை குறித்து தொடர்ச்சியாக எழுதிவருவதற்கு சமூக வலைத்தளத்தில் தொடர்ச்சியாகப் பலரும் எதிர்ப்பினைப் பதிவுசெய்து வருகிறார்கள்.