`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்! | as per trai's new scheme Consumers Can Pick 100 Channels for Rs. 153 Base Pack

வெளியிடப்பட்ட நேரம்: 05:19 (16/01/2019)

கடைசி தொடர்பு:05:19 (16/01/2019)

`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்!

தொலைக்காட்சிதான் மக்களின் பிரதான பொழுதுபோக்கு. டிவியை ஆன் செய்ததுமே எக்கச்சக்கமா டிவி சேனல்கள் கொட்டிக்கிடக்கும். சில சமயங்களில் எதைப்பார்க்கலாம் என்ற குழப்பம் கூட வரலாம். தமிழில் மொத்தம் 100க்கும் மேலான டிவி சேனல்கள் இருக்கின்றன. இருப்பினும் தங்களுக்கு விருப்பமான சேனல்களை அரசு அல்லது தனியார் கேபிள் டிவி சேவை அல்லது டி.டி.ஹெச் சேவை மூலம் மக்கள் பார்த்து வருகிறார்கள். 

டிராய்

இதற்கிடையே, நாம் பார்க்க விரும்பாத, நமக்குத்  தேவைப்படாத சில சேனல்கள் இருந்தாலும் அதற்கும் சேர்த்து கட்டணம் செலுத்துகிறோம். இந்நிலையில் விரும்பிய சேனல்களுக்கு மட்டுமே பணம் செலுத்தி பார்க்கும் முறை அமல்படுத்தப்படும் என இந்திய தொலை தொடர்புத்துறை ஒழுங்குமுறை ஆணையமான டிராய் ஏற்கெனவே அறிவித்திருந்தது. தற்போது இந்த திட்டத்தை செயல்படுத்த அமல்படுத்தவுள்ளது. பிப்ரவரி 1-ம் தேதி இத்திட்டம் அமலாகிறது. விரும்பிய டிவி சேனல்களை பார்க்கும் திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 100 சேனல்களுக்கு ரூ.153 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சேனல்கள்

டிராய் திட்டத்தின் படி ஒவ்வொரு வாடிக்கையாளரும் தாங்கள் விரும்பிய குறைந்தபட்சம் 100 சேனல்களை தேர்ந்தெடுக்க வேண்டும். இதற்கு ரூ.153.40 கட்டணம் செலுத்த வேண்டும். இந்த 100 சேனல்கள் இலவச சேனல்களாகவோ, கட்டண சேனல்களாகவோ இருக்கலாம். அதேநேரம், இந்தக் இத்திட்டத்தில் ஹெச்.டி. தொழில்நுட்ப சேனல்களை தேர்ந்தெடுக்க முடியாது. ஹெச்.டி. சேனல்கள் வேண்டும் என நினைப்பவர்கள் அதற்குரிய கூடுதல் கட்டணங்களைச் செலுத்த வேண்டும். அதேபோல் கூடுதல் சேனல்கள் தேவைப்படுபவர்களும் அதற்குரிய கூடுதல் கட்டணத்தைச் செலுத்தி பார்க்கலாம். இதுபோல ஒரு சேனலுக்கு அதிகபட்சமாக மாதத்துக்கு ரூ.19-க்கு மேல் கட்டணம் வசூலிக்கக் கூடாது எனத் தெரிவித்துள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க