பன்றிக் காய்ச்சல் பாதிப்பு! - எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமித் ஷா | BJP President Amit Shah getting treatment in AIIMS for swine flu

வெளியிடப்பட்ட நேரம்: 22:36 (16/01/2019)

கடைசி தொடர்பு:22:36 (16/01/2019)

பன்றிக் காய்ச்சல் பாதிப்பு! - எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமித் ஷா

பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அமித் ஷா

குஜராத்தின், பெரும் பணக்காரக் குடும்பத்திலிருந்து இளம் வயதில் அரசியலுக்கு வந்தவர் தான் அமித் ஷா. ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் மீதான தீவிர ஈடுபாட்டால் அதில் இணைந்த அவர் ஏ.பி.வி.பி-யில் இளைஞர்களுக்கு பெரும் தலையாக வலம் வந்தார். குஜராத் பா.ஜ.கயில் முக்கிய இடம், எம்.எல்.ஏ, அமைச்சர் பதவி, டெல்லி அரசியல் என படிப்படியாக உயர்ந்த அவர் பா.ஜ.க தலைவராகக் கடந்த 2014ம் ஆண்டு பொறுப்பேற்றார். இவரது தலைமைக்கு பின் பா.ஜ.க 19 மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்தது. மோடியின் அலையுடன் அமித் ஷாவின் உழைப்பால் பா.ஜ.க அசைக்க முடியாது இடத்தை எட்டியுள்ளது. இதற்கிடையே, வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபடத் திட்டமிட்டிருந்தார் அமித் ஷா. 

அமித் ஷா

அதன்படி கேரளா, தமிழகத்தில் இருந்து பிரசாரத்தை தொடங்கும் வகையில் பயண திட்டமும் வகுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று திடீரென உடல்நலக் குறைவு காரணமாக அமித் ஷா டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பன்றி காய்ச்சல் தொற்று இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடல்நலம் குன்றியுள்ளது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமித் ஷா, ``எனக்குப் பன்றி காய்ச்சல் தொற்று உள்ளது. சிகிச்சை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடவுளின் அருளாலும், உங்களின் அன்பு மற்றும் வாழ்த்துகளாலும் விரைவில் உடல்நலம் பெறுவேன்" என்று கூறியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க