மாமியார் தாக்கியதில் 'சபரிமலை' கனக துர்க்காவுக்கு தலையில் நரம்பு பாதிப்பு! | kanagadhurga shifted to Kozhikode hospital for some neurological issues in head

வெளியிடப்பட்ட நேரம்: 02:00 (17/01/2019)

கடைசி தொடர்பு:06:30 (17/01/2019)

மாமியார் தாக்கியதில் 'சபரிமலை' கனக துர்க்காவுக்கு தலையில் நரம்பு பாதிப்பு!

மாமியார் தாக்கியதில் சபரிமலை சென்று திரும்பிய கனக துர்க்காவுக்கு தலையில் நரம்பு பாதிப்பு  ஏற்பட்டுள்ளதால் கோழிக்கோடு அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

சபரிமலை ஏறிய கனகதுர்கா

சபரிமலையில் கடந்த ஜனவரி 2- ந் தேதி கனகதுர்கா, பிந்து ஆகிய இரு பெண்கள்  சாமி தரிசனம் செய்தனர். இதனால், கேரளாவில் வன்முறை வெடித்தது. பாதுகாப்பு காரணங்களுக்காக இரு பெண்களும் நீண்ட நாள்களாக வீடு திரும்பாமல் இருந்தனர். இரு வாரங்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை கனகதுர்கா மலப்புரத்தில் உள்ள வீட்டுக்குத் திரும்பினார். இந்தச் சமயத்தில் கனகதுர்காவின் கணவர் வீட்டில் இல்லை. சமையல் அறையில் இருந்த கனகதுர்காவின் மாமியார் பெரிய கட்டையுடன் வந்து 'நீ யார்?' என்று கேட்டவாறே தலையில் கட்டையால் அடித்துள்ளார். மாமியார் தலையில் தொடர்ந்து தாக்கியதில் கனகதுர்கா மயங்கி விழுந்தார். தொடர்ந்து போலீஸார் வந்து மீட்டு  கனகதுர்காவை மருத்துவமனையில் சேர்த்தனர். கனகதுர்காவின் மாமியார் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. 

சபரிமலை ஏறிய கனகதுர்கா

முதலில் பெரிந்தலமன்னாவில் உள்ள மருத்துவமனையில் கனகதுர்கா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தற்போது, அவரின் தலையில் நரம்பு பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து கோழிக்கோடு அரசு மருத்துவமனைக்கு கனகதுர்கா மாற்றப்பட்டுள்ளார். 

தனக்கு வெளியிலும் வீட்டிலும் பாதுகாப்பில்லை என்று கனகதுர்கா கூறியுள்ளார். கனகதுர்காவுடன் சேர்ந்து சபரிமலையில் சாமி தரிசனம் செய்த பிந்து கூறுகையில், 'கனகதுர்காவின் மாமியார் அவரைத் தாக்கியது துரதிருஷ்டவசமானது. ஆனாலும் அவரின் கணவர் அவரை ஏற்றுக் கொண்டது நல்ல விஷயம்'' என்று  தெரிவித்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க