ஒரே காலாண்டில் ரூ. 10,251 கோடி லாபம் - ரிலையன்ஸ் புதிய சாதனை! | Reliance first Indian private firm to post Rs 10k crore quarterly profit

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (18/01/2019)

கடைசி தொடர்பு:06:00 (18/01/2019)

ஒரே காலாண்டில் ரூ. 10,251 கோடி லாபம் - ரிலையன்ஸ் புதிய சாதனை!

மூன்றாம் காலாண்டில் ரூ.10,251 கோடி லாபம் ஈட்டி ரிலையன்ஸ் நிறுவனம் புதிய சாதனைப் படைத்துள்ளது. இத்தகைய மைல்கல் சாதனையை எட்டிய முதல் இந்திய தனியார் நிறுவனம் இதுதான். 

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ

கடந்த ஆண்டு இந்த காலாண்டில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் லாபம் ரூ.9,420 இருந்தது. இந்த ஆண்டில் ரூ.10,251 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டில் இதே காலாண்டில் ஈட்டிய லாபத்தை விட இது 8.8 சதவிகிதம் அதிகம். 

இந்த நிறுவனத்தின் அபரிதமான லாபத்திற்கு முக்கிய காரணம் ஜியோ வாடிக்கையாளர்கள்தான். நாடு முழுவதும் 28 கோடி வாடிக்கையாளர்கள் ஜியோவுக்கு உள்ளனர். இந்த காலாண்டில் மட்டும் 2.8 கோடி பேர் ஜியோ நிறுவனத்துக்கு வாடிக்கையாளர்களாக மாறியுள்ளனர். ஜியோ நிறுவனம் மட்டுமே நடப்பு காலாண்டில் ரூ.831 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இந்தியாவில் 3- வது மிகப் பெரிய தகவல் தொடர்பு நிறுவனமாகவும் ஜியோ உயர்ந்துள்ளது. 

ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி

ரிலையன்ஸ் இன்டர்ஸ்ட்ரீஸ் குழுமம் எண்ணெய் வர்த்தகம் முதல் செல்போன் விற்பனை வரை பல தொழில்களில் ஈடுபட்டுள்ளது. '' இந்த காலாண்டில்  எண்ணெய் வர்த்தகத்தில் ஏற்ற இறக்கங்கள் இருந்த போதிலும் சவால்களை எதிர்கொண்டு திடமான முடிவுகளை எடுத்து இத்தகைய சாதனையை புரிந்துள்ளோம். தொடர்ந்து நாட்டிற்கும் நிறுவனத்தின்  பங்குதாரர்களுக்கும் நன்மை அளிக்கும் விஷயங்களை மேற்கொள்வோம். எங்களின் திறமையான ஊழியர்கள்தான் வரலாற்று  சாதனைக்கு காரணம். தொடர்ந்து வளர்ச்சி பாதையில் பயணிப்போம்'' என்று குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க