காங்கிரஸ் - குமாரசாமி கூட்டணிக்குள் சிக்கல் - அதிருப்தி எம்.எல்.ஏ-க்களால் தொடரும் நெருக்கடி | Kumarasamy escapes crisis to rule continues by discontented mla's

வெளியிடப்பட்ட நேரம்: 20:35 (18/01/2019)

கடைசி தொடர்பு:20:35 (18/01/2019)

காங்கிரஸ் - குமாரசாமி கூட்டணிக்குள் சிக்கல் - அதிருப்தி எம்.எல்.ஏ-க்களால் தொடரும் நெருக்கடி

கர்நாடகாவில், காங்கிரஸ் மற்றும் மதச் சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சிக்கு காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் மூலம் கடந்த சில நாள்களாக நெருக்கடி ஏற்பட்டிருந்தது. இதைச் சமாளிக்க, காங்கிரஸ் சட்டமன்ற கொறடா கணேஷ் ஹுக்கேரி, (இன்று) 18 -ம் தேதி காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் அனைவரையும் சட்டமன்றத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார். 

காங்கிரஸ தலைவர்கள்

இன்று, கர்நாடக சட்டமன்றத்தில் 3.30 மணிக்குத் தொடங்கவேண்டிய கூட்டத்துக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களின் தாமதமான வருகையால், மாலை 5 மணி வரை காங்கிரஸ் தரப்பில் மொத்தமுள்ள 80 சட்டமன்ற உறுப்பினர்களில், சபா நாயகரைத் தவிர்த்து 79 பேர். அதில் 75 பேர் மட்டுமே கலந்துகொண்டனர். இதனால், காங்கிரஸ் சட்டமன்றக் கூட்டம் நடைபெறாமல் தொடர்ந்து இழுபறி நீடித்துவந்தது. அப்போது காங்கிரஸ் தரப்பில் உமேஷ் ஜாதவ், மகேஷ் குமட்டஹள்ளி, நாகேந்திர, ரமேஷ் ஜார்க்கிஹோளி ஆகிய நான்கு எம்.எல்.ஏ-க்கள் மட்டும் தொடர்புகொள்ள முடியவில்லை என்று மற்ற எம்.எல்.ஏ-க்கள் வந்துகொண்டிருப்பதாகத் தகவல் தெரிவிக்கின்றனர். உமேஷ் ஜாதவ் மட்டும் உடல் நிலை சரியில்லை என்று சித்தராமையாவுக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். அதிருப்தி எம்எல்ஏ-க்கள்

காங்கிரஸ் தரப்பில், விசாரணைக்குப் பிறகு அந்த நான்கு பேர் மீது தலைமையிடம் கலந்து ஆலோசித்து, எம்.எல்.ஏ பதவியைப் பறிப்பதா இல்லையா? என்று முடிவுசெய்ய இருப்பதாகக் காங்கிரஸ் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம், அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் தங்களின் எதிர்ப்பை எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வதன்மூலம் காட்ட ஆலோசித்துவருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த நெருக்கடியான சூழ்நிலையில், முதல்வர் குமாரசாமி தும்கூரில் உள்ள சித்த கங்கா மடாதிபதி சிவக்குமாரசாமிகள், 111 வயதில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதால், அவரைக் காணச் சென்றுள்ளார். கர்நாடக பா.ஜ.க தலைவர் எடியூரப்பா, பி.ஜே.பி-யின் மூத்த தலைவர்களுடன் தனது இல்லத்தில் ஆலோசனை நடத்திவருகிறார்.