`சமூகப் பொறுப்புகளை உணர்த்தியிருக்கிறது #Metoo பிரசாரம்!’ - பி.வி.சிந்து | #Metoo educated men and women about responsiblities towards society, says PV Sindhu

வெளியிடப்பட்ட நேரம்: 08:08 (19/01/2019)

கடைசி தொடர்பு:08:20 (19/01/2019)

`சமூகப் பொறுப்புகளை உணர்த்தியிருக்கிறது #Metoo பிரசாரம்!’ - பி.வி.சிந்து

சமீபத்தில் எழுந்த #Metoo பிரசாரம் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சமூகப் பொறுப்புகளை உணர்த்தியிருக்கிறது என முன்னணி பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து கூறியிருக்கிறார். 

பி.வி.சிந்து

பணியிடத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் தொந்தரவுகளை எதிர்கொள்வது குறித்த கருத்தரங்கத்துக்குத் தனியார் நிறுவனம் ஒன்றுடன் இணைந்து ஹைதராபாத் போலீஸார் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய பி.வி.சிந்து, ``பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்த இந்தக் கருத்தரங்கத்துக்கு ஹைதராபாத் போலீஸார் ஏற்பாடு செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 

சமீபத்தில் எழுந்த #Metoo பிரசாரம் பணியிடத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. இது பெண்கள் மற்றும் ஆண்களுக்கு சமூகப் பொறுப்புகளை உணர்த்தியிருக்கிறது என்று நான் நம்புகிறேன். வெளிநாடுகளில் நான் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, அந்த நாடுகளில் பெண்களுக்கு உரிய மரியாதையும் அவர்களுக்கான தனிப்பட்ட உரிமைகளும் அளிக்கப்படுவதைப் பார்த்திருக்கிறேன். இந்தியாவில் பெண்களுக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்று பேசுவதை நான் கேட்டிருக்கிறேன். ஆனால், அதை நடைமுறைப்படுத்தி பின்பற்றுபவர்களை மிகவும் அரிதாகவே பார்க்கிறேன். 

பி.வி.சிந்து

பெண்கள் பணிக்குச் செல்லக் கூடாது; வீட்டிலேயே இருக்க வேண்டும் என்ற எண்ணம் முன்பு இருந்தது. ஆனால், தற்போது சமூகம் முற்றிலுமாக இந்த விஷயத்தில் மாறியிருக்கிறது. ஆண்களும் பெண்களும் சமம் என்ற நிலை உருவாகியிருக்கிறது. என்னைப் பொறுத்தவரை பெண்கள் உறுதியாக இருப்பதுடம், தன்னம்பிக்கையுடன் திகழ வேண்டும்’’ என்று பேசினார்.