பீரங்கியில் வலம் வந்த பிரதமர் மோடி! - ‘மேக் இன் இந்தியா’ திட்டம் குறித்து பெருமிதம் | PM Modi takes ride on board home-made K9 Vajra vehicle

வெளியிடப்பட்ட நேரம்: 08:30 (20/01/2019)

கடைசி தொடர்பு:08:30 (20/01/2019)

பீரங்கியில் வலம் வந்த பிரதமர் மோடி! - ‘மேக் இன் இந்தியா’ திட்டம் குறித்து பெருமிதம்

எல் அண்ட் டி நிறுவனம் வடிவமைத்துள்ள கே- 9 வஜ்ரா ரக பீரங்கியில் பிரதமர் மோடி சுற்றி வந்தார். 

பீரங்கியில் மோடி

சூரத் அருகேயுள்ள ஹஸிராவில் எல் அண்ட் டி நிறுவனத்தின் ராணுவத் தளவாட தயாரிப்பு வளாகத்தைப் பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். தென்கொரிய நிறுவனமான ஹான்வா கார்பரேஷனுடன் இணைந்து எல் அண்ட் டி, கே-9 வஜ்ரா ரக பீரங்கியை தயாரித்துள்ளது. பீரங்கியைப் பிரதமர் மோடி நேற்று பார்வையிட்டார். பின்னர், வஜ்ரா ரக பீரங்கியில் அமர்ந்து வளாகத்தைச் சிறிது நேரம் சுற்றி வந்தார்.

பீரங்கியில் அமர்ந்து சென்ற  வீடியோவையும் ட்விட் செய்துள்ள பிரதமர் மோடி, ''தனியார் நிறுவனங்களும் நாட்டின் பாதுகாப்புக்கு தேவையான தளவாடங்களை தயாரிக்க முன் வந்திருப்பது குறிப்பிடத்தக்க மாற்றத்தோடு மதிப்புமிக்க பங்களிப்பு ஆகும். இதற்காக எல் அண்ட் டி நிறுவனத்துக்குப் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். 'மேக் இன் இந்தியா 'திட்டத்துக்கு புதிய உத்வேகம் கிடைத்துள்ளது.'' என்று பதிவிட்டுள்ளார். 

பீரங்கியில் பிரதமர் மோடி

ஜனவரி 26-ந் தேதி டெல்லியில் நடைபெறவுள்ள குடியரசு தின பேரணியில் வஜ்ரா uf பீரங்கி பங்கேற்கிறது.கடந்த 2017- ம் ஆண்டு 100 வஜ்ரா ரக பீரங்கிகளை தயாரிக்க எல் அண்ட் டி நிறுவனத்துக்கு மத்திய அரசு ஒப்பந்தம் அளித்தது. 50 டன் எடை கொண்ட இந்த பீரங்கி 43 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கையும் குறி தவறாமல் சுடும் திறன் படைத்தது. இந்த பீரங்கியில். 47,000 கிலோ எடை கொண்ட வெடிகுண்டுகளை நிரப்ப முடியும். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க