ஒருவர் இருக்கும் போதே இப்படி அஞ்சுகின்றனர்’ - மம்தா மாநாட்டை விளாசிய மோடி | Opposition alliance won't be successful Prime Minister Modi said

வெளியிடப்பட்ட நேரம்: 10:14 (20/01/2019)

கடைசி தொடர்பு:10:14 (20/01/2019)

ஒருவர் இருக்கும் போதே இப்படி அஞ்சுகின்றனர்’ - மம்தா மாநாட்டை விளாசிய மோடி

மத்திய பா.ஜ.க ஆட்சிக்கு எதிராக நேற்று மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் மிகப் பெரும் மாநாட்டை நடத்தினார் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி. அந்த மாநாட்டில் பா.ஜ.கவுக்கு எதிராக உள்ள பல கட்சித் தலைவர்களும் கலந்துகொண்டு மோடியையும், பா.ஜ.க அரசையும் கடுமையாக விமர்சித்துப் பேசினர். 

மோடி

இதற்கிடையில், ஸ்மார்ட் சிட்டி திட்டங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்தியாவின் யூனியன் பிரதேசமான தாத்ரா மற்றும் நாகர் ஹவேலியின் தலைநகரான சில்வாசா நகரில் பிரதமர் மோடி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசினார். '

மோடி

அவர் பேசும் போது, “ முன்னதாக மத்தியில் ஆட்சி நடத்திய அரசு ஏழை மக்களுக்காக வெறும் 25 லட்சம் வீடுகள் மட்டுமே கட்டி தந்தது ஆனால் தற்போது எங்களின் ஆட்சிக் காலத்தில் ஒரு கோடியே 25 லட்சம் வீடுகள் கட்டி தந்துள்ளோம். ஊழலுக்கு எதிரான எனது நடவடிக்கை, சில தலைவர்களுக்கு என் மீது கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் பணத்தை கொள்ளையடிப்பதை நான் தடுப்பதால் அவர்கள் என் மீது ஆத்திரத்தில் உள்ளனர். இதன் காரணமாகவே எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து மெகா கூட்டணியை உருவாக்கியுள்ளனர். 

மோடி

தங்கள் மாநிலங்களில் ஜனநாயகத்தைப் புதை குழியில் தள்ளியவர்கள் அனைவரும் தற்போது ஒரே இடத்தில் கூடி ஜனநாயகத்தைப் பற்றி பேசுகின்றனர். தற்போது உருவாகியுள்ள இந்தக் கூட்டணி மோடிக்கு எதிரானது இல்லை மக்களுக்கு எதிரானது. அனைவரும் ஒன்று சேர்வதற்கு முன்னரே அவர்களுக்குள் பல குழப்பங்கள் தொடங்கிவிட்டது. மேற்கு வங்கத்தில் ஒரே ஒரு பாஜக எம்.எல்.ஏ இருக்கும் போதே அவர்கள் எங்களைப் பார்த்து பயம் கொள்கின்றனர்” எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.