மகா மாநாட்டுக்கு வந்த தலைவர்களுக்கு உணவு பரிமாறி மகிழ்ந்த மம்தா பானர்ஜி! | Mamata banerjee serving food to opposition leaders

வெளியிடப்பட்ட நேரம்: 08:30 (22/01/2019)

கடைசி தொடர்பு:08:30 (22/01/2019)

மகா மாநாட்டுக்கு வந்த தலைவர்களுக்கு உணவு பரிமாறி மகிழ்ந்த மம்தா பானர்ஜி!

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அதிரடியானவர் மட்டுமல்ல, அன்பானவரும் கூட. அதிரடி அரசியல் கருத்துகளின் மூலம் அடிக்கடி செய்திகளில் வரும் இவர், அவ்வப்போது அரசியல் கடந்த செயல்களுக்காகவும் கவனம் பெறுவார்.

மம்தா

அண்மையில் நடைபெற்ற முகேஷ் அம்பானி வீட்டுக் கல்யாணத்தில், அனைத்து விஐபிக்களும் வெரைட்டி உடையில் கலக்க, எப்போதும் போல எளிமையாக வந்திறங்கினார் மம்தா. அது பலரையும் புருவம் உயரவைத்தது. அதே போல, போல்பூர் கிராமத்துக்கு நிகழ்ச்சி ஒன்றுக்காகச் சென்றவர், அங்கே ரிலாக்ஸாக பேட்மின்டன் விளையாடி மகிழ்ந்ததும் செய்தியானது. தற்போது, தான் நடத்திய `மகா மாநாட்டுக்கு வருகை தந்த தலைவர்களுக்கு, தனது கையாலேயே அவர் உணவு பரிமாறும் போட்டோ, சமூக வலைதளங்களில் லைக்ஸ்களை குவித்து வருகிறது. 

மகா மாநாடு

ராஷ்டிரிய ஜனதா தளத்தின் அரசியல் ஆலோசகர் சஞ்சாய் யாதவ், அந்தப் புகைப்படத்தை ட்விட்டர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், அந்தக் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவுக்கு, மம்தா சிறிய புன்னகையுடன் உணவு பரிமாறும் காட்சி இடம்பெற்றுள்ளது. ஆம் ஆத்மி கட்சி இணையப் பிரிவினர் வெளியிட்டுள்ள மற்றொரு புகைப்படத்தில், இளம் தலைவர்கள் ஹர்திக் படேல் மற்றும் ஜிக்னேஷ் மேவானிக்கும், மம்தாவே உணவு பரிமாறி மகிழ்கிறார். அந்த அறையில், தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு உள்ளிட்ட மற்ற தலைவர்கள் உணவை ருசித்துச் சாப்பிட்டபடி அமர்ந்திருக்கின்றனர்.

கடந்த 19 -ம் தேதி, கொல்கத்தாவில் `மகா மாநாடு’ நடத்தி மாஸ் காட்டினார் மம்தா. பல ஆண்டுகளுக்குப் பிறகு, 25 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்ற பிரமாண்ட மாநாடாக அது அமைந்தது.