‘இனி உலகம் முழுக்க ஐந்தே ஐந்து ஃபார்வர்டுதான்!’- வாட்ஸ் அப் அறிவிப்பு | whats app restricts messages!

வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (22/01/2019)

கடைசி தொடர்பு:15:20 (22/01/2019)

‘இனி உலகம் முழுக்க ஐந்தே ஐந்து ஃபார்வர்டுதான்!’- வாட்ஸ் அப் அறிவிப்பு

போலியான செய்திகளைப் பலருக்கும் விரைவாக ஃபார்வர்ட் செய்து வைரலாக்குவதில் வாட்ஸ்அப் முன்னணியில் இருப்பதாக வாட்ஸ்அப் செயலிக்கு கெட்ட பெயர் ஏற்பட்டது. அதில், ஃபார்வர்ட் செய்யப்படும் மருத்துவக் குறிப்புகள், பொது அறிவுத் தகவல்கள், பிரபலங்களின் மரண அறிவிப்புகள் எனப் பல்வேறு செய்திகளில், பெரும்பாலும் போலிச் செய்திகளாகவே இருந்ததால், வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு தலைவலியாகப் போனது. 

வாட்ஸ் அப்

எனவே, அதைத் தடுக்கும் நோக்கில், கடந்த ஜூலை மாதம் முதல் ஒரே நேரத்தில் ஃபார்வர்ட் செய்யும் நபர்களின் எண்ணிக்கையை 5 எனக் குறைத்தது. இந்த நடவடிக்கையைச் சோதனை முயற்சியாக இந்தியாவில் மட்டும் செயல்படுத்தியது. இந்த ஆறு மாதங்களில், இம்முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்தது. ஒரே நேரத்தில் பலருக்கும் ஃபார்வர்ட் செய்ய முடியாததால், போலிச்செய்திகள் பரப்பப்படுவது 25 சதவிகிதம் அளவுக்குக் குறைந்திருப்பது தெரியவந்தது. 

அதையடுத்து, தற்போது இந்தக் கட்டுப்பாட்டை உலகம் முழுவதும் கொண்டுவந்துள்ளது. குறிப்பாக, வாட்ஸ்அப் நிறுவனத்தின் பெரிய சந்தையாக விளங்கும் பிரேஸில், இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகள் பலவற்றில் நடைமுறைப்படுத்துகிறது. இதன்மூலம் போலிச்செய்திகள் பரப்பப்படுவது சர்வதேச அளவில் கட்டுக்குள் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.