சபரிமலை சென்ற கனக துர்காவை புறக்கணித்த குடும்பம் - பெண்கள் விடுதியில் தஞ்சம்! | kerala woman Kanagadurga who enters sabarimala shrine her family reject to enter House

வெளியிடப்பட்ட நேரம்: 11:21 (23/01/2019)

கடைசி தொடர்பு:11:21 (23/01/2019)

சபரிமலை சென்ற கனக துர்காவை புறக்கணித்த குடும்பம் - பெண்கள் விடுதியில் தஞ்சம்!

பரிமலையில் தரிசனம் செய்த கோழிக்கோட்டைச் சேர்ந்த கனக துர்கா வீட்டுக்குச் சென்றபோது தாக்கப்பட்டார். மேலும், அவரை வீட்டுக்குள் அனுமதிக்காததால் பெண்கள் விடுதியில் தங்கியுள்ளார்.

kanakadurga

கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த கனக துர்கா, கண்ணூரைச் சேர்ந்த பிந்து ஆகியோர் ஜனவரி 2-ம் தேதி சபரிமலை சந்நிதானத்துக்குச் சென்றனர். அதைத் தொடர்ந்து அவர்களுக்கு அச்சுறுத்தல் இருந்ததால் இரண்டு வாரங்கள் காவல்துறை பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில், கோழிக்கோடு பெருந்தல்மண்ணயில் உள்ள கணவர் வீட்டுக்குக் கனக துர்கா கடந்த16-ம் தேதி சென்றார். அப்போது கனக துர்காவின் மாமியார் சுமதி வீட்டில் இருந்திருக்கிறார். அவரது மாமியார் சுமதி, கனக துர்காவை தாக்கியதாக கூறப்படுகிறது.  இதையடுத்து, கனக துர்காவும் தன் மாமியாரைத் தாக்கியதாகப் புகார் கூறப்பட்டது.

கனகதுர்க்கா

இதையடுத்து, இரண்டுபேர் மீது காவல்துறை வழக்கு பதிந்துள்ளது. தலையில் காயம் ஏற்பட்டதால் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கனகதுர்க்கா நேற்று அவரது வீட்டுக்குச் சென்றார். அப்போது அவரின் கணவர் கிருஷ்ணன் உண்ணி மற்றும் குடும்பத்தினர் அவரை வீட்டில் அனுமதிக்கவில்லை. இதையடுத்து, கனக துர்கா பெண்கள் காப்பகத்தில் தங்கியுள்ளார். சபரிமலை சென்றதற்காக கனக துர்க்கா பக்தர்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என திருவனந்தபுரத்தில் சபரிமலை கர்ம சமிதி நடத்திய பொதுக்கூட்டத்தில் அவரது சகோதரன் பரத் பூஷன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.