வீட்டைவிட்டு வெளியேற்றியதில் அரசியல்! - கலங்கும் கனகதுர்கா | kanadurga's family members are BJP members, says sources

வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (23/01/2019)

கடைசி தொடர்பு:17:30 (23/01/2019)

வீட்டைவிட்டு வெளியேற்றியதில் அரசியல்! - கலங்கும் கனகதுர்கா

சபரிமலைக்குச் சென்று திரும்பிய கனகதுர்காவை வீட்டைவிட்டு மாமியார் விரட்டியதால் அவர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். 

சபரிமலையில் அனைத்து வயதுடைய பெண்களும் சாமிதரிசனம் செய்யலாம் எனக் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 18-ம் தேதி உச்ச நீதிமன்ற 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து அந்த மாநில அரசு அனைத்து வயதுடைய பெண்களையும் கோயிலுக்குச் செல்ல அனுமதி அளித்தது. கேரள அரசின் இந்த நடவடிக்கையை தேவசம் போர்டு மற்றும் பி.ஜே.பி பிரமுகர்கள் உட்பட அரசியல் கட்சிகள் பல கடுமையாக எதிர்த்து வந்தன. அவர்களின்  கடுயைமான  எதிர்ப்பையும் மீறி கனகதுர்கா, பிந்து என்ற இரு பெண்களை சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பாதுகாப்புடன் அனுப்பி வைத்தது கேளர அரசு. பிந்து, கனகதுர்கா இருவரும் திருட்டுத்தனமாகக் கோயிலுக்குள் நுழைந்ததாகக் கூறி, அவர்களை எதிர்த்து தாக்குதல் நடத்த முயற்சிகள் நடந்தன. இதனையடுத்து கனக துர்கா வீட்டுக்குக்கூட செல்ல முடியாமல் போலீஸ் பாதுகாப்பில் இருந்து வந்தார். பதற்றம் தணிந்து தனது வீட்டுக்குச் சென்ற கனக துர்காவை, அவருடைய மாமியார் மற்றும் கணவரும் வீட்டிற்குள் நுழையவிடாமல் தடுத்து நிறுத்தி வீட்டை விட்டு விரட்டியுள்ளனர். 

அதுமட்டுமன்றி 'கோயிலுக்குள் நுழைந்து பாவம் செய்துவிட்டாய். எனவே பகிரங்கமாக பொது இடத்தில் மன்னிப்பு கேட்டால் மட்டுமே அனுமதி 'என்று அடித்துள்ளனர், அதில் காயமடைந்த கனகதுர்கா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டபோது, உடன் அவருடைய மாமியாரும் தாமும் தாக்கப்பட்டதாகக் கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக வீட்டுக்குள் நுழைவதற்கு உரிமைக் கோரி நீதிமன்றத்தில் கனதுர்கா வழக்கு தொடர்ந்துள்ளார். அதேபோன்று அவருடைய மாமியார் சுமதியும்,  தன் மருமகள் வீட்டுக்குள் நுழையத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளார் .

இதனைத் தொடர்ந்து இருவர் மீதும் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக கேரளாவில் கனக துர்காவைப்பற்றி நன்கு அறிந்த அஜய் என்பவரிடம்  பேசினோம்.``கனகதுர்காவின்  மாமியார் மற்றும் கணவர் ஆகிய இருவரும் பி.ஜே.பி கட்சியைச் சேர்ந்தவர்கள். அதன்காரணமாக அவர்களை இவ்வாறு  நடத்துகிறார்கள். ஆனால், கனக துர்கா எந்தக் கட்சியையும் சாராதவர்’’ என்றார்.