குறைக்கப்பட்ட ஓய்வு வயது; நீக்கப்பட்ட ஊழியர்கள்! - சிக்கலில் சிரியன் வங்கி | Catholic syrian bank has reduced it's employees retirement age there by deducting 114 employees

வெளியிடப்பட்ட நேரம்: 18:15 (24/01/2019)

கடைசி தொடர்பு:18:15 (24/01/2019)

குறைக்கப்பட்ட ஓய்வு வயது; நீக்கப்பட்ட ஊழியர்கள்! - சிக்கலில் சிரியன் வங்கி

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஒரு நிறுவனத்தில் நுழையும்போது தனித்திட்டத்துடன் வருகிறார்கள். அதன் அடிப்படையில்தான் இந்த ஆள் குறைப்பும் நடக்கிறது.

வங்கி

கேரளாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் கத்தோலிக்க சிரியன் வங்கி அண்மையில் தனது ஊழியர்களின் ஓய்வு வயதை 60-லிருந்து 58-ஆகக் குறைத்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி அதில் இருக்கும் 58 வயது நிரம்பிய மற்றும் அதற்கும் மேற்பட்ட ஊழியர்கள் அந்த அறிவிப்பின் வழியாகவே நீக்கம் செய்யப்படுவார்கள் என அறிவித்திருத்திருக்கிறது. வரும் ஏப்ரல் மாத இறுதி முதல் இது அமலுக்கு வர இருக்கிறது. 

இப்படித் திடீர் பணிநீக்கத்துக்கான காரணத்தைக் கூறும் வங்கித் தலைமை, வங்கிக்கு கிடைக்கும் வெறும் 23% லாபத்தில் வயோதிகர்களுக்குச் சம்பளம் தருவது கூடுதல் பலுவாக இருக்கிறது. இது மற்ற எந்த வங்கிகளின் லாப அளவோடு ஒப்பிடுகையில் சற்று அதிகமான சம்பளத் தொகையே. அதனால்தான் இந்த நடவடிக்கை என்று குறிப்பிட்டுள்ளனர். மொத்தம் 3,000 ஊழியர்கள் வேலைபார்க்கும் அந்த வங்கியில் 58 அல்லது அதற்கும் மேற்பட்ட வயதை உடையவர்கள் மொத்தம் 114 பேர். தற்போது அந்த ஊழியர்கள் அத்தனை பேரின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகி இருப்பதாக அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு கூறியுள்ளது. 

கூட்டமைப்பைச் சேர்ந்த பின்சிப் என்பவர் கூறுகையில் “சிரியன் பேங்கின் பெரும் பங்குதாரரான ப்ரேம் வத்சா என்பவரின் தலையீட்டினால்தான் இப்படி நடக்கிறது. அவர் கனடா நாட்டைச் சேர்ந்தவர். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஒரு நிறுவனத்தில் நுழையும்போது தனித்திட்டத்துடன் வருகிறார்கள். அதன் அடிப்படையில்தான் இந்த ஆள் குறைப்பும் நடக்கிறது. எந்த ஒரு பேங்கிலும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்கூட பணியில் இருக்கிறார்கள். இவர்கள் எந்த அடிப்படையில் ஓய்வு வயதைக் குறைத்தார்கள் எனத் தெரியவில்லை. இந்தத் திடீர் பணி நீக்கம் செய்வது ஏற்புடையது அல்ல” என்கிறார்.    
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க