அப்போது தீவிரவாதி... இப்போது ஹீரோ! காஷ்மீர் வென்ற முதல் `அசோக சக்ரா’ | Once a Militant, Now national hero - Lance Naik Nazir Wani to get Ashok Chakra

வெளியிடப்பட்ட நேரம்: 17:47 (24/01/2019)

கடைசி தொடர்பு:17:47 (24/01/2019)

அப்போது தீவிரவாதி... இப்போது ஹீரோ! காஷ்மீர் வென்ற முதல் `அசோக சக்ரா’

டந்த செப்டம்பர் மாதத்தில் காஷ்மீரில் சோபியான் மாவட்டத்தில் பதன்கன்ட் கிராமத்தில் நடந்த என்கவுன்டரில் 6 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகள் திருப்பி தாக்கியதில் பாதுகாப்புப்படை வீரர் லேன்ஸ் நாயக் நஷீர் அகமது வானி வீர மரணமடைந்தார். 38 வயதான நஷீர் அகமது வானி 2004-ம் ஆண்டு இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். 

அசோக சக்ரா விருது பெற்ற தீவிரவாதியாக இருந்து மனம் மாறிய ராணுவ வீரர்

தெற்குக் காஷ்மீரில் உள்ள தெஸ்கி அக்முஜ் என்ற கிராமத்தைச் சேர்ந்த இவர், முதலில் தீவிரவாதியாக இருந்து ராணுவத்தை எதிர்த்துச் சண்டையிட்டவர். பின்னர், வன்முறையால் உலகுக்கு அமைதி கிடைக்காது’ எனக் கருதி  மனம் திருந்தி ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றத் தொடங்கினார். இருமுறை சேனாமண்டல் விருதைப் பெற்றுள்ளார். ராணுவத்தின் நம்பிக்கைக்குரிய வீரராக விளங்கிய அகமது வானியின் உயிரை அதே தீவிரவாதம் பறித்துக்கொண்டது.  கடந்த நவம்பர் மாதம் நடந்த தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் அவர் நாட்டுக்காக வீரமரணம் அடைந்தார். அகமது வானி காஷ்மீரின் செகி அஷ்முஜி கிராமத்தைச் சேர்ந்தவர். 

 

அசோகா சக்ரா விருது பெற்ற  நஷீர் அகமது வானி

தற்போது அகமது வானிக்கு அசோக சக்ரா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசு தின நிகழ்ச்சியின்போது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதை அகமது வானியின் குடும்பத்தினரிடம் வழங்குகிறார். காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் இந்த விருதைப் பெறுவது இதுதான் முதன்முறை. 

இந்திய ராணுவத்தில் வீர தீர செயல்கள் புரியும் வீரர்களுக்கு வழங்கப்படும் விருதுகளில் அசோக சக்ரா விருது உயரியது ஆகும். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க